
கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், 12 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் வரும் டிச.3ஆம் தேதி முதல் மக்கள் பயணிக்கலாம் என்று, தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது.
பயணிகள் இணைப்புப் பெட்டி குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…
கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டன. அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா கால நெருக்கடிகள் தளர்த்தப் பட்டு, தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மீண்டும் 12 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைப்பதற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்களில், வரும் 3 ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்களில் செல்லலாம்.
அந்த ரயில்களின் விவரம்…
- சென்னை சென்ட்ரல் – பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்.
- பெங்களூரு பிருந்தாவன் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்.
- சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ்.
- கோவை – சென்ட்ரல் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்.
- விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ்.
- திருப்பதி – விழுப்புரம் எக்ஸ்பிரஸ்.
- சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்.
- திருப்பதி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்.
- சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்
- திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் – சென்னை சென்ட்ரல்.
- மங்களூரு சென்ட்ரல் – மட்கான் பாசஞ்சர்.
- மட்கான்- மங்களூரு சென்ட்ரல் பாசஞ்சர்.
இந்த 12 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு 2ஆம் வகுப்பு அமர்ந்து செல்லும் கட்டணம் வசூலிக்கப்படும்.