
கொட்டும் மழையில் தன் துணையினை அன்போடு அணைத்துக்கொண்டு காக்கும் தவளையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அன்பு அதானே எல்லாம் என்பதை உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கொட்டும் மழையில் இரண்டு தவளைகள் பூக்களின் மீது அமர்ந்து கொண்டு ஒன்றுக்கொன்று பாதுகாப்பாக அமர்ந்து உள்ளது.
மழைக்குள் முழுவதும் நனைந்த படி இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதரவாக அமைதியாக பூக்களின் மீது அமர்ந்திருக்கும் வீடியோவை பலரும் ரீ ட்வீட் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தலைப்பில் பதிவிட்டுள்ள அவர், வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்வதுதான் சிறந்தது என பதிவிட்டுள்ளார்.
சுசந்தா நந்தா வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில் கடவுள் நீங்கள் வேண்டியதை விட பல நேரங்களில் உங்களுக்கு அதிகமாகவே தருகின்றார் என பதிவிட்டுள்ளார்.
இந்த தலைப்பின் கீழ் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் காட்டில் இரண்டு வெள்ளை நிற மான்கள் இயற்கையின் அழகை பார்த்துக்கொண்டு நடந்து செல்கின்றது.
மான்களின் மீது சூரிய கதிர்கள் விழுந்து அங்கிருக்கும் பச்சை நிற மரங்கள் சூரியனின் கதிர்களில் பிரதிபலிக்கின்றது.
இந்த வீடியோவை இதுவரை 1.6லட்சம் மக்கள் லைக் செய்துள்ளனர். 206 பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.