
கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் உள்ள சித்தாப்புரா தாலுகா வாடி டவுன் பகுதியில் வசித்து வந்தவன் விஷ்ணு ஜாதவ்.
8 வயதான இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிறுவனின் தந்தை, மருந்து, மாத்திரைகள் மூலம் குடிபழக்கத்தில் இருந்து விடுபட முயன்று வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், சிறுவனின் தந்தை மிளகாய் பஜ்ஜி மீது மருந்து தடவி வைத்துள்ளார். இதை அறியாத சிறுவன் விஷ்ணு சாப்பிட்டதாக தெரிகிறது.
இதனால் அவனுக்கு வாந்தி, மயக்கம் உண்டானது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விஷ்ணுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவனுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விஷ்ணு உயிரிழந்தான்.
இது குறித்து வாடி டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், மருந்து தடவிய பஜ்ஜியை சிறுவன் விஷ்ணு தவறுதலாக சாப்பிட்டதால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.