கரீபி ஹடாவோ எனும் ஏழ்மையை அகற்றுவோம்
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
நீங்கள் செங்கோட்டையில் இந்தப் பிரதமர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டீர்களென்றால், இந்தக் குடும்பத்தின் அனைத்து பிரதமர்களின் உரைகளைக் கேட்டீர்களென்றால், அவர்களின் 20-25 நிமிட உரைகளில் 10 நிமிடங்கள் வரை, கரீபி எனும் ஏழ்மை பற்றி பேசுவார்கள். எந்த ஒரு தேர்தல்காலப் பரப்புரையை வேண்டுமானாலும் கேளுங்கள், அவர்கள் ………. ஜபமாலையை உருட்டித் தீர்ப்பார்கள்.
நேரு, 1951 – நாம் இரண்டாவது போராட்டத்தை நடத்த வேண்டும், அந்த உண்மையான போராட்டம், இந்தியாவின் ஏழ்மையோடு நாம் தொடுக்கும் போர். இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்தோடு போர்.
இந்திரா காந்தி, 1982 – தேசத்திலிருந்து ஏழ்மை அகல வேண்டும் என்பது தான் இன்று நமது குறிக்கோள். பிற்பட்டிருக்கும் பகுதிகளில் இருப்போர் பிற்பட்ட நிலையிலிருந்து உயர வேண்டும்.
இந்திரா காந்தி, 1984 – தன்னிறைவான, மற்றவர்களை விடச் சிறப்பான வாழ்க்கை வாழ்வோரின் தேவைகளை நிறைவேற்றும் அதே வேளையில், வாழ்க்கையில் பின் தங்கிப் போன, ஏழ்மையில் இருப்போரின், பலவீனமானவர்களின் தேவைகளுக்கும் அதே அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
ராஜீவ் காந்தி, 1985 – பாரதநாட்டின் ஏழ்மையை நாம் அகற்றவில்லை என்று சொன்னால், நாம் செய்யத் திட்டமிடும் அனைத்துப் பணிகளும் வீணாகியே போகும். ஆகையால் நாம் ஏழ்மையை அகற்றும் பணியில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம்.
ராஜீவ் காந்தி, 1987 – ஏழ்மையை அகற்றுவதற்கு நாங்கள் முதன்மை அளித்திருக்கிறோம். ஏழ்மையை அகற்றுவதில் எங்களின் முழுச் சக்தியையும் நாங்கள் செலுத்தியிருக்கிறோம்.
மன்மோஹன் சிங், 2005 – நமது இந்த வேகத்தை நாம் தொடர்ந்து மேற்கொண்டோமேயானால், வரவிருக்கின்ற 5-10 ஆண்டுகளில் பாரதம் முழுவதிலிருந்தும் ஏழ்மை, பட்டினிச் சாவு, நோய்களிலிருந்து விடுபட முடியும்.
ராகுல் காந்தி, 2013 – பாதி ரொட்டியாவது உண்போம் என்ற உங்களுடைய கோஷத்தை நான் மாற்ற விரும்புகிறேன். முழு ரொட்டியை உண்போம், 6 நாட்கள் வேலை செய்வோம், மருந்துகளை எடுப்போம், காங்கிரஸ் கட்சியைக் கொண்டு வருவோம்.
சோனியா காந்தி, 2014 – நம் மண்ணிலிருந்து ஏழ்மை என்ற சாபம் முடிவுக்குக் கொண்டு வரப்படாத வரை நம்மால் நிம்மதியாக உறங்க முடியாது.
ராகுல் காந்தி, 2019 – எங்களுடைய பணி, காங்கிரஸ் கட்சியின் பணி இந்தியாவைப் பாதுகாப்பது. இந்தியாவின் ஏழைகளைப் பாதுகாப்பது. பலவீனமானவர்களைப் பாதுகாப்பது.
ராகுல் காந்தி, 2024 – ஒரே ஒரு அடியில், ஒரே ஒரு அடியில், இந்தியாவிலிருந்து ஏழ்மையை நாங்கள் அகற்றி விடுவோம்.