
பெங்களூரு: பெங்களூருவின் சில இடங்களில் இன்று மாலை புழுதிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், திடீரென மழை பெய்துள்ளது பெங்களூருவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வடக்கு பெங்களூரு பகுதியில் புழுதிக் காற்று பயங்கரமாக வீசியது.
ஒயிட்பீல்டு பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையைக் கையில் எடுத்து வைத்து, மக்கள் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



