இன்று வேலைக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை!? எடுக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது
காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இன்று நடக்கவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பத்து மையத் தொழிற்சங்கங்களும் கலந்துகொள்கின்றன. இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து சேவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய, மாநில ஆளும் கட்சிகள் தவிர்த்த கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கடந்த முதல் தேதியன்று நடந்தது.
அதில், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஏப்.5ஆம் தேதியன்று பொது வேலைநிறுத்தம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.