கர்நாடக தேர்தல் முடிந்தது; பெட்ரோல் விலை உயர்ந்தது!

இந்தியா சற்றுமுன் வணிகம்

cars petrol - 2026

புது தில்லி: கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த 20 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிந்த நிலையில் இன்று உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலையை ஒவ்வொரு நாளும் சந்தை நிலவரத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வந்தன. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெட்ரோல் டீசல் விலை அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதால், கடந்த 20 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.

ஈரானுடன் அணுசக்தி உடன்பாட்டை அமெரிக்கா முறித்துக் கொண்டதால், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இனிவரும் நாட்களில் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரக் கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 69.56 ஆக இருந்தது, இன்று 23 காசு உயர்த்தப்பட்டு ரூ. 69.79 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 77.43 ஆக இருந்தது இன்று, 18 காசு உயர்த்தப்பட்டு ரூ. 77.61 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.