காரப் பணியாரம்
தேவையானவை:
இட்லி மாவு – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். இட்லி மாவுடன் உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாகி, குழிகளில் சிறிதளவு எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.
மாவை நீர்க்க கரைத்தால் உப்பி வராது.