images 3 - 2026

அரசு அமைக்க அழைப்பு விடுங்கள்  என்று ஆளுநருக்கு காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார்.

IMG 20181212 WA0022 1 - 2026

மத்திய பிரதேச தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்றிருக்கும் காங்கிரஸுக்கு அரசு அமைக்க அழைப்பு விடுங்கள் என்று ஆளுநருக்கு கடிதம் கொடுத்துள்ளது காங்கிரஸ்.

முன்னதாக மத்திய பிரதேசத்தில் 114 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

.ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில் 114 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பிற கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பாஜக 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 1 இடங்களிலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending