வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்கள் விரைவில் வெளியீடு!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
atal bihari vajpayee ji - 2026

புது தில்லி : மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மரியாதை அளிக்கும் விதமாக, அவரது உருவம் பதித்த ரூ.100 நாணயத்தை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

35 கிராம் எடையுள்ள இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் உருவப் படத்துடன் அவரது பெயர் தேவநாகிரி எழுத்திலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட உள்ளது. அதற்கு கீழ் வாஜ்பாய் 1924 – 2018 என பொறிக்கப்பட உள்ளது.

நாணயத்தின் மறு பக்கத்தில் சிங்க முகத்துடன் கூடிய அசோக சின்னம் பொறிக்கப்பட்டு அதன் நடுவே ‘சத்யமேவ ஜெயதே’ என்ற வாசகம் பொறிக்கப்படும். வாஜ்பாய் உருவத்தின் இருபுறமும் பாரத், இந்தியா என ஆங்கிலத்தில் பொறிக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.