anurag takkur - 2026

நமோ அகெய்ன்… மீண்டும் நமோ.. என்ற வாசகங்கள் எழுதப் பட்ட டிஷர்ட் பனியனுடன் அனுராக் தாக்குர் நாடாளுமன்றத்துக்கு இன்று வந்திருந்தார். இது பலரையும் கவர்ந்திழுத்தது.

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக., சார்பில் மோடியே முன்னின்று வெற்றி பெறுவார் என்று பாஜக.,வினர் கூறி வருகின்றனர். அதற்காக பல்வேறு பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இமாசலப் பிரதேசத்தின் ஹாமிர்புர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜக., தலைவருமான அனுராக் தாக்குர் வித்தியாசமான கெட்டப்பில் இன்று நாடாளுமன்றத்துக்கு வந்து அசத்தினார். மீண்டும் நமோ… மீண்டும் நரேந்திர மோடி என்ற வாசகத்துடன் அவரது பிரசாரத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்தப் படங்கள் டிவிட்டரில் வைரலானது. அதில் #ModiOnceMore டிவிட்டர் டேக் சேர்த்து பகிரப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending