கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்பு!

Published:

pramod savant goa cm - 2026

கோவா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவியேற்றார். பனாஜியில் ஆளுநர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் மிருதுளா சென் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆயுர்வேத மருத்துவர்.. கோவாவின் முதல்வர்!

கோவாவின் புதிய முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார் பிரமோத் சாவந்த். இவர் கோவாவின் 13வது முதல்வர். ஆயுர்வேத மருத்துவரான இவர், முன்னதாக மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசில், கோவா சட்டமன்ற சபாநாயகராக செயல்பட்டவர்.

1973 ஏப்.24ம் தேதி பாண்டுரங்க், பத்மினி சாவந்த் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். தற்போது 46 வயதாகும் சாவந்த், கோலாப்பூர் கங்கா கல்வி சமுதாய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பயின்று, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் பட்டம் பெற்று மருத்துவராகப் பணி செய்தவர். புனேவில் உள்ள திலக் மகாராஷ்ட்ரா பல்கலையில், சமூகப் பணி பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.

சாவந்தின் மனைவி சுலக்‌ஷ்னா வேதியியல் ஆசிரியராக பிசோலிம் பகுதியில் உள்ள சாந்தாதுர்கா மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார். இவர், கோவா மாநில மகிளா மோர்சா – பெண்கள் பிரிவு தலைவராகவும் உள்ளார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img