கலப்பு திருமணம் செய்த தம்பதியினா் உயிரோடு எரித்து கொலை பெற்றோர் ஆத்திரம்…!
மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் பார்னர் பகுதியில் உள்ள நிகோஜ் கிராமத்தை சேர்ந்தவா் ருக்மணி என்ற இளம்பெண் இவருக்கும் மற்றொரு சமுதாயத்தை சோ்ந்த மங்கேஷ்ரன்சிங் என்பவரும் காதலித்து வந்துள்ளனா். இவா்களத காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துாக கூறப்படுகிறத. இதனையடுத்து பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி காதலா்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனா். இது இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனினும் திருமணம் செய்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இது ருக்மணி குடும்பத்தினரின் கண்ணை உறுத்தியது. கலப்பு திருமணம் செய்த ஜோடிகள் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துவதை அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
இதனையடுத்து இளம்பெண்ணின் உறவினா்களான பெண்ணின் சித்தப்பா, பெரியப்பா மற்றும் மாமா உள்ளிட்ட உறவினர்கள் தம்பதியை பிடித்து வந்து அவர்கள் உடலில் பெட்ரோலை ஊற்றினர். பின்னர் ஈவு இரக்கமின்றி தம்பதியினரை உயிரோடு தீவைத்து கொளுத்தினர்.
இதில் வலியால் அலறி துடித்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புனே சசூன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், ருக்மணி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். கவலைக்கிடமான நிலை யில் உள்ள மங்கேஷ் ரன்சிங்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் உறவினர்களை கைது செய்து உள்ளனர். மேலும் தலை மறைவாக உள்ள பெண்ணின் தந்தையை தேடிவருகின்றனர்.
கலப்பு திருமணம் செய்த தம்பதி உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



