பெங்களூரு சிட்டி (சங்கொள்ளி ராயண்ணா) ரயில் நிலைய பிளாட்பாரம் எண் ஒன்றில் வெடிகுண்டு காணப்பட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பெங்ளூரு சிட்டி (சங்கொள்ளி ராயண்ணா) ரயில் நிலையத்திற்கு நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று சுமார் 8.45 மணி அளவில், மைசூருவில் இருந்து வந்த ரயிலில் கிருஷ்ணா என்ற போலீஸ்காரர் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார்.
பின்னர், போலீஸ் நிலையம் செல்ல 5வது பிளாட்பாரத்திலிருந்து முதலாவது பிளாட்பாரத்திற்கு சென்றார்.
அப்போது பிளாட் பாரம் ஒன்றில் சந்தேகம் எழும் வகையில் வெடிகுண்டுவை போல ஜெலட்டின்கள் இருப்பதை கண்டுறிந்தார்.
உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்ததும், ஜெலட்டின்கள் இருப்பதை கண்டறிந்தனர். உடனே பிளாட் பாரத்தில் இருந்த பயணிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓடத்தொடங்கினர்.
சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரயி்லவே போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், டெட்டனேட்டர் வைக்கப்பட்டிருந்த இடத்தை சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் டெட்டனேட்டர்களை பத்திரமாக மீட்டு ரயில் நிலையத்திற்கு வெளியில் கொண்டு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, டெட்டனேட்டர்களை மர்ம ஆசாமிகள் எதற்க்காக ரயில் தண்டவாளத்தில் வைத்தனர். அல்லது ரயிலில் கொண்டு செல்லும் போது தவறி கீழே் விழுந்ததா என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து சென்ற ரயில்களை சோதனை செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அத்துடன், இங்குள்ள 11 பிளாட்பாரங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
காலை 9.00 மணிக்கு பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், மேலும் 11.00 மணிக்கு காட்பாடி மார்க்கமாக காகிநாடா வரை செல்லும் சேஷாத்ரி எக்ஸ்பிரஸ் ஆகியவை செல்லவேண்டும்.
இந்த இரு ரயில்களை குறிவைத்து டெட்டனேட்டர்கள் வைக்கப்பட்டதா அல்லது வேறு காரணங்களுக்காக வைக்கப்பட்டதா என போலீசார் தீவிரசாரமாக சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் டெட்டனேட்டர்களை வைத்த மர்ம நபரை அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.
வெடிகுண்டு சம்பவத்தால் 09.00 மணிக்கு புறப்படவேண்டிய சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல, ரயில் முழுவதும் போலீசார் தீிவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர், ஒரு வழியாக காலை 11.20 மணிக்கு பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.
இதை தொடர்ந்து சுமார் 45 நிமிடம் தாமதமாக காகிநாடா வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.
இது குறித்து, தென்மேற்கு ரயில்வே பெங்களூரு மண்டல வர்த்தக பிரிவு முதன்மை மேலாளர் ஸ்ரீதர்மூர்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது காலை 09.00 மணிக்கு பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் பிளாட்பாரம் எண் ஒன்றில் இருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.
இந்த ரயில் புறப்பட்ட பின்னர் இங்குள்ள தண்டவாளத்தில் ஜெலட்டின்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனே, ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து செலட்டின்களை பாதுகாப்பா கைபற்றி வெடிகுண்டு நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், இதனால், பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பயணிகள் பீதி அடையவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்றார்.
இது குறித்து ஏ.டி.ஜி.பி. அலோக் மோகன் கூறுகையில், ‘ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்து வெடிமருந்துகள் நிரப்பப்படாத வெத்து டெட்னேட்டர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. யார் எந்த நோக்கத்திற்காக இவற்றை வைத்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரயில் நிலையத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது வெத்து டெட்டனேட்டர்கள் என்பதாக இருந்தாலும், இதை சாதாரணமா எண்ணிவிடக்கூடாது. எனவே போலீசார் பெங்களூருவில் உள்ள ரயில் நிலையங்கள் முழுவதும் தவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்’ என்றார்.
இச்சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள ரயில்வே பயணிகளிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



