#காளேஸ்வரம் ஒரு பொறியியல் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்!
தண்ணீர் பிரச்னை, குடிநீர் பிரச்னை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்று புலம்பிக் கொண்டும், போராட்டத்தில் ஈடுபடுவதிலும் மட்டுமே தமிழக போராளிகள் சர்வதேச அளவில் முதலிடம் பெற்றவர்கள்.
எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று திட்டமிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை பாதுகாப்பு, நிலங்களுக்கு உச்ச பட்ச இழப்பீடு என்ற பெயரில் அத்தனைக்கும் முட்டுக்கட்டை போட்டு தமிழக மக்களை தவிக்கவிட்டு முட்டாள்களாக்கி வைத்துள்ளனர்.
தெலங்கானாவில் ரூ. 80,000 கோடி செலவில் கோதாவரி ஆற்றில் கட்டப்பட்ட காளேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் குடிநீர் திட்டம் உலக அளவில் மிகப்பெரிய திட்டமாக இன்று இடம் பெற்றிருக்கிறது.
மகாராஷ்டிராவில் உற்பத்தி ஆகும் கோதாவரி ஆறு, தெலங்கானா, ஆந்திரா வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது. குடிநீர் மற்றும் வேளாண்மை தேவைக்கு 2016-ல் காளேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார்.
உலகிலேயே மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் பகீரதா குடிநீர் காலேஸ்வரம் திட்டம் 3 ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்…
- இந்தத் திட்டத்தில் 1,500 கி.மீ தொலைவுக்கு கால்வாய் வழியாகவும், 203 கி.மீ தொலைவுக்கு சுரங்கப்பாதை வழியாகவும் நீர் கொண்டு வரப்படுகிறது.
- கோதாவரி ஆற்றில் 35 கி.மீ தொலைவு வரை தண்ணீர் சேமிக்க முடியும்.
-
காலேஸ்வரம் அணையிலிருந்து 3 அணைகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.
அங்கிருந்து 19 நீர்த் தேக்கங்கள் மூலம் தெலங்கானா மாநிலம் முழுவதும் குடிநீர் வழங்கப்படும். -
85 மதகுகள் காலேஸ்வரம் அணையில் கட்டப்பட்டுள்ளது.
-
40 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தி 11 ராட்சத மோட்டார் மூலம் 2 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்படும்.
-
6,200 குடும்பங்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
-
20,000 தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்து கட்டிய அணை.
-
19 இடங்களில் நீரேற்று நிலையங்கள் மற்றும் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
-
16 இடங்களில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் குடிநீர் திட்டம் பலன்கள் :
45 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இரு போகம் விவசாயம் செய்ய நீர் வழங்கப்படும்.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்.
169 டிஎம்சி தண்ணீர் விவசாயத்திற்கு வழங்கப்படும்.
தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு 16 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும்.
அண்டை மாநிலமான ஆந்திராவிலும் நதிநீர் இணைப்பு மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது.
ஆனால் தமிழகத்தில் உள்ள பிரிவினைவாத சக்திகள் காவிரி, கோதாவரி ஆறு இணைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பாதிப்பு என்று பொய் பிரச்சாரம் மற்றும் சுரங்கப்பாதை அமைத்தால் பூமி பிளந்து தமிழகம் உள்ளே சென்றுவிடும் என்று கற்பனை கதை கட்டி விடுவார்கள்.
குடிநீர் மற்றும் வேளாண்மைத் தேவைக்கு எப்படி அண்டை மாநிலங்களில் தீர்வு காணப்படுகிறது என்பதைப் பார்த்து தமிழகத்தில் கற்றுக் கொள்ள வேண்டும்.
லாரிகளை மட்டுமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தால்… உங்கள் மகனும் பேரனும் கூட லாரிகளை எதிர்நோக்கியே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை தமிழர்கள் உணரவேண்டும்.
தெலுங்கு பின்னணி கொண்ட ‘தமிழ்’ வியாபார அரசியல்வாதிகளால் தமிழகம் தன்னிலை இழந்து, வளர்ச்சி குன்றி அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தெலுங்கு பேசும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு தமிழர் அல்லாத இங்குள்ள தெலுங்கு பின்னணி கொண்ட திமுக., உள்ளிட்ட திராவிடக் கட்சிகளே காரணம் என்பதை உணரவேண்டும்!




