ஸ்டாலின் கிட்டே ஒத்த சீட்டு பிச்சையெடுக்க என்னல்லாம் செய்ய வேண்டியிருக்கு! வைகோ மைண்ட் வாய்ஸ்!

Published:

vaiko in van - 2026

ஸ்டாலினிடம் ஒத்த சீட்டு வாங்குறதுக்கு இந்த வைக்கோ படுற கஷ்டம் இருக்கே, இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது…

எத்தன செருப்படி, கல்வீச்சு, அப்பப்பா!!!!

மோடிக்கு கருப்புகொடி காட்ட கன்னியாகுமரி சென்ற வைகோ மீது காவல்கிணற்று பகுதியில் கல்வீச்சு, போலிசார் மீட்டு திருப்பி அனுப்பினர் என்கிறது செய்தி!

முன்பே சொன்னதுதான் இந்த கருப்பு சட்டைகள், இந்திய எதிர்ப்பு எல்லாம் மதுரை தாண்டினாலே செல்லாது அதுவும் கன்னியாகுமரி பக்கம் நெருப்பாய் இருப்பார்கள்

பாஜக வலுவாக காலூன்றியிருக்கும் பகுதி அது, அப்பக்கம் மிக வேகமாக வளர்ந்தும் வருகின்றது!

கூடங்குளம் உதயகுமார் செயலற்றுபோக பாஜகவின் வளர்ச்சியும் காரணம்

அந்தக் கோட்டைக்கு வரும் மோடியினை கோட்டை வாசலில் சென்று வைகோ எதிர்த்தால் விடுவார்களா?

அங்கு வைகோ வருகின்றார் என்றவுடன் பாஜவினர் ஏராளம் பேர் திரண்டிருக் கின்றார்கள், நமக்கு இவ்வளவு கூட்டமா என மகிழ்ந்த வைகோ இறங்கி தன் வழக்கமான 8 கட்டை ராகத்தில் பாட ஆரம்பித்திருக்கின்றார்!

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

கூட்டம் பொறுக்கமுடியாமல் கற்களை வீசி அடித்திருக்கின்றது, சிங்கள துப்பாக்கிகளையே சமாளித்த வைகோவுக்கு இந்த தாக்குதல் புதிது என்பதால் திணறியிருக்கின்றார்!

தெளிவாக சொன்னால் “அடித்து துவைத்து கல் எறிந்து சனியனே போ” என விரட்டி யிருக்கின்றார்கள்

காவல்துறை வரவில்லை என்றால் விபரீதம் நடந்திருக்கலாம் , எப்படியோ காப்பாற்றப் பட்டுவிட்டார்!! வைகோ இன்ன்னும் திருந்தமாட்டார் என்பதால் என்ன செய்வார் தெரியுமா?

காவல்கிணறிலிருந்து நெல்லை திரும்பும் வழியில் சூட்டு பொத்தை என்றொரு வனாந்திர பகுதி உண்டு! அங்கு தனியாக நின்று கொண்டு “இவன் தமிழருக்கு ஊழியஞ் செய்தானே, தமிழருக்காக பாடுபடு கின்றானே, இவன் இன்னும் எவ்வளவு நாளு உயிரோட இருப்பாண்ணே தெரியாதே.. என அழுது கொண்டிருப்பார்

பொதுமக்களிடம் வைகோ அடிக்கடி அடிவாங்க என்ன காரணம்? திமுகவினர் வைகோவின் பழைய பேச்சுக்கு இப்பொழுது பழிவாங்குகின்றார்களோ? எப்படியோ மோடி என்பதை வைகோ என மாற்றிகாட்டியவர்களுக்கு வாழ்த்துக்கள்!

மிஸ்டர் வைகோ, பாரும் நீர் மட்டும்தான் அடிவாங்குகின்றீர் ஆனால் ஸ்டாலினோ திருமாவோ உம்மை தூண்டிவிடுகின்றார்களே தவிர அடிவாங்குகின்றார்களா?

ALSO READ:  FCRA சட்டம்; வெளிநாட்டு சதிகளும் உள்நாட்டு அரசியலும்!

கொஞ்சமாவது யோசியும் அய்யா.!!

– ஸ்டான்லி ராஜன்  (Stanley Rajan)

Related articles

Recent articles

spot_img