air - 2026கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 5 என்ற விடியோ கேம் இணையத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த விளையாட்டில் விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து மேலெழும்புவது போலவும்,அப்பொழுது எரிபொருள் நிரப்பிய லாரி மீது மோதுவது போலவும் வந்து பின் விலகுவதாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கான விளம்பரம் இணையத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இதனை உண்மை என்று நம்பி பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ட்வீட் போட்ட சம்பவம் அனைவரையும் நகைப்புக்குள்ளாகியுள்ளது.

பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியின் பொதுச் செயலாளர் குர்ரம் நவாஸ். இவர் மேலே குறிப்பிட்ட விளம்பரத்தை பார்த்து விட்டு, விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பி விட்டதாகவும், அதற்கு விமானியின் சாமர்த்தியமே காரணம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பலரும் இது விடியோ கேம் ஒன்றில் வரும் விபத்து என்று எடுத்துச் சொன்ன பின்னர் அவர் தனது பதிவை அவர் நீக்கியுள்ளார்.இச்செயல் பெரும் நகைப்பினை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending