
தந்தை நண்பரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை பெரம்பூரை சேர்ந்த தொழிலதிபர் சாமுவேல். இவருக்கு சர்ச் மூலமாக அறிமுகமான நண்பர் வின்சென்ட். சாமுவேலுக்கு 35 வயதில் ஜோஸ் என்ற மகனும், வின்சென்ட்டுக்கு 20 வயதில் பல் மருத்துவம் படிக்கும் மகளும் உள்ளனர்.
ஜோஸ் திருமணம் ஆனவர், 2 குழந்தைகளும் உள்ளனர்., வின்சென்ட் மகளிடம் நட்புடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த இளம் பெண்ணை அடைய ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அந்த இளம் பெண்ணோ ஜோஸின் விருப்பத்துக்கு மறுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், தாம் ஏற்றுமதி தொழில் செய்து வருவதால், அதை பற்றி சொல்லி தருவதாக வீட்டிற்கு அந்தபெண்ணை அழைத்துள்ளார். பல நாட்கள் தவிர்த்து வந்த நிலையில், போன வாரம் ஜோஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த பெண். வீட்டுக்குள் நுழைந்ததும், வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறார் ஜோஸ். கட்டிப்பிடித்து, ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தவும், அதிர்ச்சியானார் அந்த பெண்.
உடனே “நான் உங்களை காதலிக்கிறேன், இதை பற்றி நானே உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன் அதற்குள் நீங்கள் இப்படி அவசரப்படுகிறீர்களே. நம்ம 2 பேர் வீட்டிலும் பேசி, பிறகு கல்யாணம் செய்து கொள்ளலாம்” என்று எதை எதையோ சொல்லி, அங்கிருந்து உடனே தப்பித்து வெளியேறி விட்டார்.

வீட்டிற்கு வந்து, தந்தை வின்சென்ட்டிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து, வின்சென்ட் மாதவரம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுக்கவும், ஜோஸை கைது செய்து விசாரித்தனர்.
ஜோஸ் பற்றி பல விஷயங்கள் தெரிய வந்ததுள்ளது. வசதியான, கல்லூரி மாணவிகளை குறி வைத்து, தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று கூறி, பலரை ஏமாற்றி அவர்களின் வாழ்வை சீரழித்து உள்ளார் ஜோஸ். இதையடுத்து, காவல்துறையினர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.



