December 6, 2025, 3:29 AM
24.9 C
Chennai

முதுமொழி எண்பது சொல்வது என்ன?

muthu mozhi kanchi 1 - 2025

முதுமொழி எண்பது:

நல்லி குப்புசாமி செட்டியார் 80 வகையான அமுத மொழிகளை முதுமொழிக்காஞ்சி என்ற நூலிலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறார் கூடலூர் கிழார் என்பவர் எழுதி இருக்கிறார். இது நூறு வாழ்வியல் வழிகாட்டி வாசகங்கள் இருக்கிறது

காஞ்சி என்பதற்கு அணிகலன் என்று பொருள் வைத்து முத்துக்கள் ரத்தினங்கள் பழங்கள் ஆகியவற்றால் தேர்ந்த அணிகலன்களாக காஞ்சி என்ற சொல் குறிக்கப்படுகிறது

அதைப்போல முதுமொழிக் காஞ்சி என்ற நூல் பலவிதமான கருத்துக்களைக் கொண்டு அமைந்துள்ளதால் அதற்கு பெயர் வந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

80 வகையான முதுமொழிகள்

1. கற்பது நல்லது அதை விட சிறந்தது நடத்தை

2. ஈகை சிறந்தது அதைவிட சிறந்தது வாய்மை

3. இளமை திறந்தது அதைவிட சிறந்தது நோயற்ற வாழ்வு

4. நல்ல குடிப்பிறப்பு சிறந்தது அதைவிட மேலானது கல்வி கற்பது

5 கற்றல் நல்லது அதைவிட கற்றவரை மதிப்பது

6.ஒருவரது அடையாளம் அவரது குலம் அல்ல குணம்

7 ஒருவரது கனிந்த மனம் அவரது வள்ளல் தன்மையால் விளங்கும்

8 இன்னது எதிர்காலத்தில் நடக்கும் என்று சொல்லக்கூடியவர் ஏற்றம் உடையவரே

9.தம்மைத்தாமே பெருமைப்படுத்தி பேசிக்கொள்வார்கள் உயர்ந்த குடியில் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள்

10 திருட்டு செயல்கள் சிறிதோ பெரிதோ அதை ஒரு திருடனை முழுமையாக அடையாளம் காட்டும்

11 சொல்லின் சோர்வு பொருள் நாணயம் இல்லாதவன் செயலிலும் சிறந்தவனாக இருக்க மாட்டான்

12 அறிவுடையவர் எல்லாவற்றிலும் குறைபாடு உள்ளவர்

13 அறிஞர்கள் பிறரது குறைபாடுகளை பொது இடங்களில் சொல்ல மாட்டார்கள்

14 தற்பெருமை பேசுபவர்கள் யாரையும் பழிப்பதில் பயனில்லை

15 மோசமான மன்னனின் நாட்டிலிருந்து கொண்டு அவனைப் பழிப்பது பயனில்லை

16. கொடுங்கோல் அரசன் நாட்டில் வாழ்ந்த பழிப்பதிலும் பயனில்லை

17 முன்பின் தெரியாத நாட்டின் பழக்கவழக்கங்களை பழிக்கக்கூடாது

18 தீயோர் இடம் உள்ள செல்வத்தால் பயனில்லை

19 மானம் முக்கியம் பசித்தாலும் மானம் இழக்கக்கூடாது

20.விருப்பமில்லாமல் தரக்கூடிய கொடை கொடையே அல்ல

21 கஷ்ட காலத்தில் நண்பருக்கு உதவாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை

22 முட்டாளின் துணையை விட தனிமை மேலானது

23 முதுமையின் முன்கோபம் பயனில்லாதது

24 செல்வத்தை தனியே நுகர்வது பயனில்லை

25 கணவனின் இயல்பு அறிந்து நடப்பவளே நல்ல மனைவி

26 மனைவியுடன் இணைந்து வாழ்வதே வாழ்க்கை

27 பிறருக்கு உதவாதவன் புகழ் பெற முடியாது

28 மனம் கலங்காத நண்பர் நாடுதற்குறியவர் அல்ல

29 துன்பப்பட்டவனே பிறர் துன்பத்தை உணர்வான்

30 திறம் அறிந்து கற்பதே நோன்பு

31 முதியோர் என்பவர் மறுபிறப்பு உண்டு என்பதை அறிந்து நடந்து கொள்வார்கள்

32 உதவி செய்து வாழ்வதே வாழ்க்கை

33 வசதியான பழக்கவழக்கங்களே நல்லவை

34 நல்லனவற்றிற்கு வழி செய்யாத பழக்கவழக்கங்கள் தீயவை

35 கொடுக்க முடிந்ததைக் கொடுக்காதது அதைவிடக் கொடுமை வேறு எதுவும் இல்லை

36 புகழ்பட வாழாதார் நடைபிணம்

37 ஆசைப்படுவது கொடிய வறுமை

38 நமக்குப் பின்னும் புகழ் என்பது விட மேலானது வேறொன்றுமில்லை

39 பிச்சை எடுப்பதை விட கேவலமான செயல் வேறு எதுவும் இல்லை

40 சிறப்புகளில் பெருஞ்சிறப்பு ஈகை

41 புத்திசாலிகள் இனிமையாக வாழ்வதில் இல்லை என்பது பொய்

42 பெரும் பணக்காரன் கோபப்படாமல் இருப்பான் என்பது பொய்

43 மது அருந்துபவன் சோர்வில்லாமல் இருப்பான் என்று சொல்வது பொய்

44 நேரத்தை சரியாக பயன்படுத்த அவன் வெற்றி பெறுவான் என்று சொல்வதும் பொய்

45 இனி என்ன நேரும் என்பதை உணர தெரியாதவன் தன்னைக் காத்துக் கொள்வான் என்று சொல்வது பொய்

46 தொழில் திறமை இல்லாதவன் உயர்வான் என்று சொல்வதும் பொய்

47 திறமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத பெருமை பெற முடியாது

48 பிறரது பெருமைகளை விரும்பாதவன் இடம் வந்து சேரும்

49 பேராசைக்காரன் முறையாக நடந்து கொள்ளமாட்டான் மனத்தூய்மை இல்லாத ஒருவனின் தவம் வெற்றி பெறாது

51 புகழ் தரும் அறச்செயல்களை விரும்பிச் செய்பவர்கள் சுவர்க்கம் செல்வது எளிது

52 பகை வளர்ப்பவர்கள் அதிக அளவு போரிட நேரும்

53 கருணை கொண்டவர்களுக்கு மிக எளிது

54 புறம் கூறுபவர்கள் ரகசியம் காப்பதில்லை

55 துன்பத்தில் இன்பம் பெறுவது எளிது

56 விரும்புவர்கள் துன்பம் அடைவார்கள்

57.விருப்பமுள்ளவன் நோயாளி

58 பெண்கள் மீது நாட்டம் கொள்பவர்கள்

59 பிறர் பொறுப்புகளின் சுமையை ஏற்பவர்கள் பகிர்ந்து உண்ணுதல் எளிது

60 நட்பு இல்லாதவர்கள் கொலை செய்வது எளிது

61 முறை தவறும் ஆட்சியில் வறுமை வரும்

62 கிழவனின் காமம் ஒரு வறுமையே

63 வேசக்கார நண்பருடன் சேர்வர்து வறுமைக்கு வழி

64 நோயாளிக்கு இன்பம் கிடைப்பதில்லை

65 அன்பு இல்லாரின் அணைப்பும் ஒரு வறுமையே

67 அகம்பாவம் உள்ள இடத்தில் பேசுவது பயனற்றது

68 மனதளவில் ஏழையாக இருப்பவன் நட்பு கொள்வதும் வறுமையே

69 செல்லாத இடத்தில் சினத்தினால் பயனில்லை

70.நட்பு பாராட்டாத இடத்தில் முதலில் கூறுவதில் பயனில்லை

71 உயர்ந்தவராக வாழ விரும்புபவன் பிறரது நல்ல குணங்களை பாராட்டத் தயங்க மாட்டான்

72 செல்வமும் வளமும் பெற்று வாழ விரும்புபவன் புகழ் பெற விரும்பும் செயல்களைச் செய்யாமல் இருக்க மாட்டான்

73 நல்ல ஆசிரியரை தேடிக் கற்றுக் கொள்ள விரும்புவோர் அந்த ஆசிரியரை வழிபடாமல் இருக்க மாட்டான்

74 புகழுடன் வாழ விரும்புவர்கள் தவம் செய்வது போன்ற அக்கறையுடன் வாழ்வார்கள்

75 நல்ல ஆலோசனைகளை கேட்காமல் இருக்க மாட்டான் என்று விரும்புபவன் கஷ்டப்பட்டு உழைப்பான்

77 மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் துன்பங்களை பொருட்படுத்துவதில்லை

78 புலன் இன்பங்களில் நாட்டம் உள்ளவன் பிற்காலத்தில் துன்பப்படுவான்

79 மக்களின் நன்மையை விரும்பும் ஆட்சியாளர்கள் நீதி வழுவாது ஆட்சி செய்வார்கள்

80 காம இன்பம் நாடுபவன் குழிப்பறிப்பவனாகவே இருப்பான்

இந்த எண்பது வாசகங்களையும் எந்த வயதினரும் மனதில் பதிந்து கொள்ளலாம்.

நிறைவான வாழ்வு வாழ்வதற்கு இந்த வழிகாட்டி வாசகங்கள் சமூகத்தின் மீது அக்கறை இருந்த காரணத்தினால் தான் கிழார் என்ற புலவர் தமக்கு முன்னே வாழ்ந்த அறிஞர்களின் கூற்றை தனது சொற்களில் பதித்திருக்கிறார்.

இது ஏதோ பழைய இலக்கியம் என்று ஒதுக்கி விடக் கூடாது இதை படித்து நாமும் பயன்பெறுவோம்.

kalaimakal dm - 2025

source :கலைமகள் தீபாவளி மலர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories