காவல்துறையில் இரு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டுள்ளார்.
பாஸ்கரன் எஸ்.பி. பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு செய்து, அதேப் பிரிவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சுகுணாசிங்-திருநெல்வேலி மாவட்டம் தென்காசி ஏ.எஸ்.பி. (திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஏ.எஸ்.பி.) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சுகுணா சிங் கடந்த 2013-ல் ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று ஐதராபாத் தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார்.
பின்னர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஏ.எஸ்.பியாக பணியாற்றினார். இவர் தற்போது தென்காசி சரக ஏ.எஸ்.பியாக பொறுப்பேற்க உள்ளார்.
இவர்கள் இருவரும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.




