8 வருடங்களுக்கு பிறகு ரஜினி தனது ரசிகர்களை இன்று சந்தித்து வருகிறார்.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் ரசிகர்களிடம் ரஜினி பேசியதாவது : சென்னையில் இருக்கும் என சகோதர்
எஸ்.பி.முத்துராமனிடம் இருந்து தான் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டேன். உண்மை,
நேர்மையை கற்றுக் கொள்டேன். அவர் என்னிடம் சொல்லும் இரண்டு விஷயங்கள், ஒன்று
டென்ஷன் ஆகாமல் உடலை பார்த்துக் கொள்கொள். இரண்டாவது ரசிகர்களை சந்தித்து,
போட்டோ எடுத்துக் கொள்.
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. சொல்வதற்கு வெட்கமாக
உள்ளது. இருந்தாலும் சொல்கிறேன். அப்போது எனக்கு குடிப்பழக்கம் இருந்தது.
அதனால் இரவு தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாக சூட்டிங்கிற்கு போவேன். இதனை
பார்த்து விட்டு எஸ்.பி.முத்துராமன் என்னை தனியாக அழைத்து, ரஜினி நீ இப்போ
ஹீரோ. நீயே லேட்டாக வந்தால் மற்றவர்களும் லேட்டாக தான் வருவார்கள்
என்றார்.அன்று முதல் தினமும் சூட்டிங்கிற்கு நான் தான் முதல் ஆளாக செல்வேன்.
நீங்கள் உங்கள் குடும்பத்தை, பிள்ளைகளை பாருங்கள். குடிபழக்கம், புகைபழக்கத்தை
விடுங்கள். அது உடல்நலத்தை மட்டுமல்ல மனநிலையையும் பாதித்து தவறான முடிவுகளை
எடுக்க வைத்து, வாழ்க்கை அழித்து விடும். இவ்வாறு அவர் பேசினார்.



