17 3 2020 செவ்வாய்க்கிழமை அன்று செங்கோட்டை சிங்கேரி சாரதா மடம் மற்றும் ஸ்ரீ பாரதி தீர்த்த வேதபாடசாலை ஆகியவற்றை பார்வையிட நெரூர் ஸ்ரீவித்யா சங்கர சுவாமிகள் விஜயம் செய்தார்கள்.
1991 ஆம் ஆண்டு சேலத்தில் பிறந்தவர் சிறுவயதிலிருந்தே ஆன்மீக ஈடுபாடு கொண்டு ஆங்கில படிப்பை தவிர்த்து வேத ஆய்வுக்கு உட்படுத்தி கொண்டார்.
திருக்கோடிக்காவல் மற்றும் மந்திராலயத்தில் உள்ள பாடசாலையில் வேத அத்யயனம் முடிந்த பிறகு சன்யாச வாழ்க்கையை ஏற்றுக்கொண்டார் சிங்கேரி ஆச்சாரியாள் மற்றும் ஸ்ரீவித்யா உபதேச ஸ்ரீ தாரமங்கலம் சுப்ரமணிய சாஸ்திரிகள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சந்நியாச தர்மத்தில் உயர்ந்ததாக பரமஹம்ச சன்யாசம் பெற்றார்.
தனது 13-வது வயதிலேயே உத்தரகாசி இல் ஸ்ரீ பிரம்மானந்த சரஸ்வதி மகா ஸ்வாமிகளிடம் மஹாவாக்ய உபதேசம் பெற்றார் அதன்பிறகு ஸ்ரீ வித்யா சங்கர சுவாமிகளால் யோக பட்டம் பெற்றார் பட்டத்திற்கு வந்த பிறகு கடுமையான ஜப பூஜைகள் செய்து சந்நியாச தர்மத்தை நிலைநாட்டி வருகிறார்.
ஊரிலுள்ள ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானத்தை தன் இருப்பிடமாகக் கொண்டார் ஆன்மிக அன்பர்களுக்கு வழிகாட்டுவதற்காக பல உபதேசங்களை சத்சங்கங்களை செய்துவரும் சுவாமிகள், அன்றும் தர்மத்தையும் சாஸ்திர நீதியையும் மக்களுக்கு உபதேசித்தார்.
அன்று காலை அச்சன் கோவிலில் உள்ள சாஸ்தாவை தரிசனம் செய்து பின் செங்கோட்டை மடத்திற்கு வந்து சேர்ந்த சுவாமிகள் சாரதா மற்றும் ஆதிசங்கரர் சன்னிதானத்தில் வழிபாட்டினை முடித்து பாரதி தீர்த்த வேத பாடசாலைக்கு சென்று அங்குள்ள பாலகர்களைக் கண்டு அவர்களின் வேத பாடங்களை கேட்டு அவர்களுக்கு ஆசீர்வாதம் புரிந்தார்கள்.
பின்னர் மக்களுக்கு தனது அனுகிரகபாசனத்தை தொடங்கினார்கள் அதில் அவர்கள் சாஸ்திரம் எவ்வாறு நமக்கு உரைக்கிறது அவ்வாறு அவ்வழியில் நாம் சென்று அதனை பின்பற்ற வேண்டும் என்பதனை உறுதியாக கூறினார்கள்.
ஒரு ஊருக்கு செல்லும் வழியும் நமக்கு தெரியாது அதற்கான வெளிச்சமும் இல்லை எனும்பொழுது வெளிச்சத்தோடு அந்த ஊரைப்பற்றி நன்கு தெரிந்தவன் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னால் எவ்வாறு பின்தொடர்ந்து அவனை நம்பி செல்வமோ அதைப்போல் சாஸ்திரங்களும் வேதங்களும் நமக்கு ஒரு பாதை வகுத்திருக்கிறது
அது காட்டும் பாதையில் நாம் செல்ல வேண்டும் நமக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது இருக்கும் பொழுது முன்னவர்கள் சொன்ன பாதையில் நாம் நடந்து நல்வழியினை நம்வாழ்வின் மோட்சத்தை பெறுவோமாக என்று கூறினார்கள்
ஆதிசங்கரர் இதனைத்தான் எல்லோருக்கும் கூறினார்கள் தர்ம வழியில் நடங்கள் சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றுங்கள் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை மூன்று வேளையும் சந்தியாவந்தனம் போன்றவற்றை தவறாது கடைபிடிக்க வேண்டும் அதற்கு வீட்டிலுள்ள பெண்கள் அதனை வற்புறுத்தி செய்யச் சொல்லவேண்டும்
தன் பிள்ளைகளுக்கு நேரமில்லை என்று சொல்வதைவிட அதற்கான நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு அதனை தவறாது செய்வதே நம் தலையாய கடமையாக அமையும் என்றும் சிரத்தை அதுவே ஸ்ரார்த்தம் அதனைச் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதனை இளைய சமுதாயத்திற்கு ஆணித்தரமாக காட்டும் வகையில் வீட்டில் நாம் ஸார்த்த காரியங்களை செய்யும் பொழுது வீட்டு குழந்தைகளை பள்ளிகளுக்கு விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து அதனை கவனிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்
அப்பொழுது தான் அதன் மகத்துவம் புரிந்து பின்னாளில் அவர்கள் அதனைத் தொடர்ந்து செய்வார்கள் என்பது எவ்வளவு முக்கியம் என்றால் ஒருவன் பணமே இல்லாவிட்டால் கூட பிச்சை எடுத்தாவது அதனை செய்ய வேண்டும் இல்லை என்றால் தென்திசையில் உள்ள முள் மரங்களில் புரண்டு அழ வேண்டும் என்று சாஸ்திரம் கூறுவதை அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.
நித்திய கர்மங்களை தவறாது செய்ய வேண்டும் வீட்டில் உள்ள கடவுளுக்கு பூஜை செய்ய வேண்டும் பூஜை செய்துவிட்டு தவறான காரியங்களில் ஈடுபடுவது மிகப்பெரிய தவறினை ஏற்படுத்தும் கடவுள் நிச்சயமாக நம் போலி வேடங்களுக்கு நம்மை திரும்பிப் பார்க்க போவதில்லை ஆஸ்திகர் வேஷமிட்டு திரியக்கூடாது என்றும், அதேசமயம் சிரார்த்த தினத்தில் பூஜை செய்கிறேன் என்று கடவுளின் பின்னே சென்றாலும் கடவுள் திரும்பி பார்க்க போவதில்லை அன்று முக்கியமான கடமை ஸார்த்தம் செய்வதே என்றும் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
ஆத்திக நாத்திக நாத்திக ஆத்திக என்ற இருவகையான மனோபாவத்தை உடைய மனிதனை பற்றி அவர்கள் கூறினார்கள்
சந்திரசேகர பாரதி சுவாமிகள் ஒரு முறை விஜய யாத்திரை மேற்கொள்ளும் பொழுது சர் சி வி ராமன் அவர்கள் அவரை தரிசனம் செய்ய வருகிறார் என்பதற்காக ஒரு நாஸ்திக அன்பர் சர்சிவி ராமனை காண்பதற்காக அங்கு சென்றார்.
ஆனால் அவருக்கு சுவாமிகள் மீதோ நம் இந்து சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கையும் ஈடுபாடு இன்றி இருந்தார் தான் சுவாமிகளை நமஸ்கரிக்க மாட்டேன் நெற்றியில் விபூதி இட்டுக் கொள்ள மாட்டேன் பஞ்சகச்சம் அணிய மாட்டேன் என்றெல்லாம் கூறிக்கொண்டு அங்கு வந்தார்.
கடந்து செல்லும் சுவாமிகள், ஒரு பார்வை பார்க்க நாத்திக எண்ணம் கலைந்து ஆஸ்தீக எண்ணம் சூழ்ந்து சுவாமிகளின் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்து தன் தவறுக்காக அவர் மன்னிப்பு கேட்ட சம்பவத்தை எடுத்துரைத்தார்கள்.
ஒரு நாத்திகன் ஆத்திகன் ஆக மாறுவது சர்வசாதாரணமாக நிகழ்ந்துவிடும் ஆனால் ஆஸ்திகனாக இருந்து கொண்டு எதையும் சாஸ்திரத்தையும் சம்பிரதாயத்தையும் வேதத்தையும் நம்பாமல் மேம்போக்காக நடந்துகொள்வது என்பது அதில் இருக்கும் நாஸ்திகம் என்றும் அதனால் ஒரு பயனும் இல்லை என்றும் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
ஆச்சார அனுஷ்டானங்களை முன்னோர்கள் செய்த செயல்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருவதே சிறந்ததாக அமையும். நதி தீரத்தில் அமைந்த நம் ஊரும் ,வெயிலின் கொடுமை மற்ற இடங்களில் கொளுத்திக் கொண்டிருக்கும் பொழுது பொதிகையின் தென்றல் தாலாட்டும் செங்கோட்டையின் சிறப்பையும் அவர்கள் பேச்சினூடே சிறப்பித்துக் கூறினார்கள்
இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த ஊரில் அருகில் பாடசாலையும் கோவில்களும் நதியும் இருக்கும்பொழுது இந்து சனாதன தர்மத்தை எவ்வாறு போற்றிப் பாதுகாக்க வேண்டும் அதில் நாம் எவ்வாறு லயித்து ஈடுபட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கூறினார்கள்.
பெண்டீர் நெற்றியில் குங்குமம் இடுவது மங்கலநாண்களை அணிவதோ இக்காலகட்டத்தில் குறைந்து கொண்டிருப்பதையும் பெண்கள் குங்குமம் மற்றும் மங்கல அணிகலன்கள் அணிந்திருப்பதை குறித்தும் அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.
அந்நாளில் பெண்களுக்கு மங்கலநாண் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் விவாகரத்து இல்லாமல் செய்து இருந்தது இன்று அதிகப்படியான விவாகரத்துக்கள் நடைபெறுவதற்கு காரணம் மங்கள நாண் மீதும் மங்கள சூத்திரங்கள் மீதும் ஈடுபாடு குறைந்ததே காரணம் என்றும் குங்குமம் அணிதல் மங்கல நாண் அணிதல் ஆகியவற்றின் அவசியத்தை குறித்தும் கூறினார்கள்.
முடிவாக அனைவரும் சனாதன தர்மத்தை அனுசரித்து அதனை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி அனைவருக்கும் மங்கள அட்சதைக் கொடுத்து தன் உரையை முடித்துக்கொண்டார்கள்.