
கரோனா ஊரடங்கு பொது முடக்கத்தால் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை நிலையை வைத்து மதுரை நகரில் கொள்ளை முயற்சிகள் அதிகம் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்
மதுரை பார்க் டவுன் பகுதிகளில் நள்ளிரவில் பல வீடுகளில் கொள்ளையர்கள் கையில் கடப்பாறையுடன் வலம் வருவதை அப் பகுதி சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
இதன் சிசிடிவி காட்சிகள்…
ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு சுமார் 1.30 மணி அளவில் பார்க் டவுன் 2 வது தெருவில் இருவர் கையில் கடப்பாரையுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டாவது தெருவின் மேற்குப் பகுதியின் கடைசியிலிருந்து பல வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறலாம் என்று போலீசார் பொதுமக்களை எச்சரித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் கையில் கடப்பாரையுடன் சிலர் நள்ளிரவு நேரத்தில் வலம் வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை



