அரசு அலுவலகங்களுக்கு ஆறு நாளும் வேலை நாட்களாக அறிவிப்பு!

சற்றுமுன் தமிழகம்
tamil nadu

வாரத்தில் இனி அரசு அலுவலகங்களில் ஆறு நாட்களும் வேலை நாட்களாக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு: நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும் என்றும் அரசு பணியாளர்கள் வருவதை அறிக்கை தயார் செய்து தினமும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றும் சனிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.