நெல்லை தென்காசி உள்பட 7 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் சில மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணுவும்,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜூவும்,
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டியும்,
திருவண்ணாமலை ஆட்சியராக சந்தீப் நந்தூரியும்,
தென்காசி மாவட்ட ஆட்சியராக சமீரனும்,
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக கிளாட்ஸ்டோன் பொன்ராஜூவும்,
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜூம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஷில்பா பிரபாகர் சுகாதாரத்துறை இணை செயலாளராகவும், ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் சுந்தர் தயாளன் , சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச்செயலாளராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த குறைதீர் சிறப்பு பிரிவு அதிகாரியாகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயகாந்தன் மீன்வளத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.