மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகைக்குப் பின் திமுக.,வினர் அதிகம் இனி உளறுவார்கள் என்றார் பேராசிரியர் சீனிவாசன்.
மதுரையில் பாஜக மாநிலச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், தமிழகம் வரும் அமித்ஷா மாவட்ட மாநில நிர்வாகிகளை சந்திக்கிறார். எந்த மாநிலத்திற்கு அமித்ஷா சென்றாலும் அங்கு வெற்றி தான். அமித்ஷா வருகைக்குபின் தமிழக தேர்தல் களம் மாறும்… என்று குறிப்பிட்டார்.
மேலும், தமிழக தேர்தல்களம் அமித்ஷா வருகைக்கு முன், அமித்ஷா வருகைக்கு பின் என நிலவரம் மாறும். அரசியல் சூடு பிடிக்கும். எந்தெந்த மாநில மண்ணில் அமித்ஷா கால் வைக்கிறோரோ அங்கு வெற்றிதான்.
திமுகவுக்கு மோடி போபியா உள்ளது. எதற்கெடுத்தாலும் மோடி மற்றும் மத்திய அரசு தான் காரணம் என திமுக சொல்லிக் கொண்டுள்ளது… இனி திமுகவினர் அதிகமாக உளறுவார்கள். திமுகவுக்கு பயம் அதிகமாகும்.
கொரானாவால் வேல் யாத்திரை தடை என தமிழக அரசு சொன்னது நியாயமானது. ஆனால் எங்களுக்கு அது நியாயமானதில்லை. அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். நமது அம்மா பத்திரிகை சொன்னால் அதற்கான காரணத்தை அதிமுக நிர்வாகிகள் சொல்வார்கள். நமது அம்மா பத்திரிக்கை கருத்து அதிமுகவின் கருத்து தானா எனத்தெரியவில்லை. நமது அம்மா பத்திரிக்கை கருத்தை அதிமுக தலைவர்களே கூட மறுக்கலாம். அப்படி இருந்தால் கூட இவ்வளவு நாள் சொல்லாமல் இப்போது ஏன் கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை. வேறு ஏதேனும் காரணம் இருந்தால் அதிமுக அரசு தான் அதை தெளிவு படுத்த வேண்டும்.
ஸ்டாலினை விட அழகிரி கெட்டிக்காரர். அரசியல் சாமர்த்தியம் உள்ளவர். அழகிரி கட்சி தொடங்கினால் பாஜக வரவேற்கும். அது நியாயமானதும் கூட. அதை நான் வரவேற்பேன்… என்றார்.