மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்திவிராஜ். தமிழில் மொழி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். இவர் இயக்குனர் அவதாரம் எடுத்த திரைப்படம் ‘லூசிபர்’. இப்படம் அரசியல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதையாகும், இப்படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில், இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இப்படத்தை தமிழில் ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கவுள்ளது தெரியவந்துள்ளது.

பிரசாந்த் நடிக்கும் ஒரு புதிய படத்தை மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் மீது ஏற்பட்ட சில அதிருப்தி காரணமாக அவர் நீக்கப்பட்டார். தற்போது அவர் சிரஞ்சீவியை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.lucifer

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending