மகளிர் சுய உதவிக் குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை!

Published:

madurai-police-crime-branch
madurai-police-crime-branch

மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருநகர் நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு மனைவி நிர்மலா 36. இவர் மகளிர்சுய உதவிக்குழுவில் ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கடன் பெற்றுள்ளார். இந்த தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

இதனால் சுய உதவிக் குழுவினருடன் மனவருத்தம் ஏற்பட்டது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்தவர் வீட்டில் விஷம் தின்று தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கணவர் சுரேஷ்பாபு கொடுத்தபுகாரில் திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரை ஆரப்பாளையத்தில் பிளாட்பாரத்தில் கடைநடத்தியவர் கைது

மதுரை ஆரப்பாளையம் மஞ்சள்மேடு மினி காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் விக்னேஷ்வரன் 23. இவர் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பிளாட்பா ஏ.ஏ.ரோடு பிளாட்பாரத்தில் திடீரென்று மீன்கடை நடத்தினார். பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால் கரிமேடு போலீசார் விக்னேஷ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


மதுரை கூடல்நகரில் கத்திமுனையில் வழிப்பறி
வாலிபர் கைது!

மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கோபி 38. இவர் கூடல்நகர் மெயின் ரோட்டில் சென்ற போது அவரை வழிமறித்து கத்திமுனையில்மிரட்டி அவரிடமிருந்த செல்போனையும் அவர் வைத்திருந்த ரூபாய் எண்ணூறையும் வாலிபர் ஒருவர் பறித்துச்சென்றுவிட்டார். இது தொடர்பாக கோபி கூடல்புதூர்போலீசில் புகார்செய்தார் . போலீசார் வழக்குப் பதிவு செய்து பணம் பறித்த ரமேஷ் என்ற ரெக்கடி ரமேசை தேடி வருகின்றனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

அவனியாபுரத்தில் எல.ஐ.சி. மேலாளர் வீட்டை உடைத்து 19 பவுன் நகை கொள்ளை பட்டப்பகலில் துணிகரம்!

மதுரை அவனியாபுரம் மண்டேலாநகர் நாகப்பாநகரை சேர்ந்தவர் பாண்டிவேல்41.இவர் அருப்புக்கோட்டையில் எல.ஐ.சி.யில் உதவிமேலாளராக பணியாற்றி வருகிறார்.இவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார்.

இவர் மனைவி மாலதி தன் குழந்தைகளுடன் அருகில் உள்ள போலீஸ்குடியிருப்பில் துக்க வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மாதவி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டில் பீரோவில் வைத்திருந்த பத்தொன்பதுபவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்தஇந்த கொள்ளை தொடர்பாக பாண்டிவேல் அவனியாபுரம் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை ஆசாமிகளை தேடிவருகின்றனர்.


மதுரையில் நடந்த விபத்தில் இரண்டு பேர் பலி

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் நடந்தவிபத்தில் இரண்டுபேர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கீரைத்துறை மேலத்தோப்பு தெருவை சேர்ந்தவர் முத்து 63. இவர் மேலவடம்போக்கி தெருவில் சென்றபோது பைக் மோதி படுகாயமடைந்தார் . அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சே பலன்இல்லாமல் முத்து பறிதாபமாக உயிரிழந்தார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் பூச்சிதெருவை சேர்ந்தவர்முனியாண்டிமகன் ராம்குமார்19.இவரும் செம்பூரணிதெருவைசேர்ந்த‌ தங்கம் மகன் கௌதம் 18 இருவரும்பைக்கில் வெள்ளக்கல் பகுதியில் சொன்றபோது காரியாபட்டியில் இருந்து மதுரை வந்த அரசு டவுன்பஸ் மோதி விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே ராம்குமார் பலியானார்.
இந்த விபத்துகள் தொடர்பாக போக்குவரத்துப்புலனாய்வு பிரிவுபோலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.


Related articles

Recent articles

spot_img