
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார்.
கொரொனோ தொற்று வழிமுறைகளை பின்பற்றி கையுறைகளை அணிந்து பொது இடைவெளியுடன் வரிசையில் சென்று வாக்களித்தார். முன்னதாக முதலமைச்சர் தனது இல்லத்தில் தாயார் தவசியம்மாள் மற்றும் மறைந்த முதலவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
காரைக்குடியில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் , புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் ஓட்டளித்தார்.

மதிமுக பொதுசெயலர் வைகோ, கலிங்கப்பட்டியில் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டார்
திண்டிவனத்தில் ஓள்ள ஓட்டுச்சாவடியில், பா.ம.க., இளைஞரணி அன்புமணி, தனது குடும்பத்தினருடன் வந்து ஓட்டு போட்டார்.
மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள ஓட்டுச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஓட்டு போட்டார்.
திண்டிவனத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓட்டு போட்டனர்.