நகங்கள், கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நகங்களை பாதுகாத்து பராமரிப்பதில் பெண்களை மிஞ்ச இயலாது.
நகத்திற்கு பாலிஷ் செய்து, சுத்தமாக பராமரித்து வடிவில் வைத்து அழகு பார்ப்பது பெண்களுக்கே உரிய குணம் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட நகங்கள் உடைவதை தடுக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காண்பது குறித்து இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும். மேலும் தைராய்டு பிரச்சனைகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளைக் குறிக்கும் அடையாளமாகவும் இருக்கலாம் என்றும் சில மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதற்கான காரணங்களை கீழ் உள்ள குறிப்பில் தெரிந்து கொள்வோம்.
அடிக்கடி நெயில் பாலிஷ் பயன்படுத்துவது, துணிகளைத் துவைக்கும்போது கடினமான டிடர்ஜென்ட் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்துவதால் நகங்கள் பாதிப்படையும்.
அதிகமான ஈரப்பதத்தால் எளிதில் உரிந்து உடைய வாய்ப்புள்ளது. வேதிப்பொருள்கள் நிறைந்த நெயில் பாலிஷ் ரிமூவர் (அசிட்டோன்) போன்றவற்றை உபயோகப்படுத்துவதால், நகங்கள் பாதிப்படையும். இரும்புச்சத்துப் பற்றாக்குறை, உடலில் உள்ள ஏதேனும் நோய் அல்லது தொற்று நோய் போன்ற காரணங்களால் நகங்கள் பாதிப்படையும்.
தைராய்டு பிரச்சனை, குறை பிட்யூட்டரி செயல்பாடு, நீரிழிவுநோய், ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோமலாசியா போன்ற நாளமிலா சுரப்பு கோளாறுகலும் இதில் அடங்கும்.
இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பது எப்படியென்று பார்க்கையில், பாத்திரங்கள் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்யும் போது இரப்பரால் ஆன கையுறைகளை அணிந்துகொள்ளலாம். சோப்பு அல்லது டிடர்ஜென்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது குறைந்த அளவே பயன்படுத்தவும். இதனால் அவற்றால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கலாம்.
லோஷன் அல்லது மென்மையான கிரீமை நகங்கள் மற்றும் விரல் முனைகளில் தேய்த்துக்கொள்வது நகங்களுக்கு நன்மை சேர்க்கும். நகங்களின் முனைகளின் வடிவத்தை சீராக்க, உலோகமல்லாத உபகரணத்தைப் பயன்படுத்தவும்.
நகங்களில் ஏற்படும் சில மாற்றங்கள் நம் உடல் நோய்க்கான அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நகங்கள் இயற்கையாகவே நம் விரல்களை பாதுகாப்பதற்காக படைக்கப்பட்ட ஒன்று. ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 மில்லி மீட்டர் நீளம் வரை நகங்கள் வளர்கின்றன. நம் உடலில் ஏற்படும் பெரிய நோய்களை வெளிப்படுத்தும் விதமாக நகங்களில் நிறமாற்றங்கள் நிகழ்கின்றன. நகங்கள் வெள்ளையாக இருந்தால் இரத்தம் குறைவாக இருப்பதை காட்டுகிறது, அதுவே நகங்களின் குறுக்கே பள்ளமான கோடுகள் தென்பட்டால் நமக்கு வயதாகி விட்டது என்று அர்த்தமாம். இது மட்டுமல்லாமல் இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் இவற்றில் ஏற்படும் பாதிப்புகளையும் நகங்களின் நிறங்கள் சுட்டிக் காட்டுகின்றன
வெளிர் நகங்கள் கீழ்க்கண்ட நோயின் அறிகுறிகளாக இருக்கலாம் அனிமியா (இரத்த சோகை) இதய செயலிழப்பு கல்லீரல் நோய்ஊட்டச்சத்து பற்றாக்குறைஇவற்றில் எதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நோய் தீவிரம் ஆகாமல் தடுக்க உதவும்.
வெள்ளை நகங்கள்
நகங்களின் நடுவில் வெண்மையாகவும், விளம்புகள் கருப்பாகவும் தென்பட்டால் அது ஹெபடைடிஸ் போன்ற கல்லீரல் பிரச்சனையை குறிக்கிறது. மற்றொரு காரணமாக மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். எனவே உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.
மஞ்சள் நிற நகங்கள்
நிறங்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு காரணம் அதிலுள்ள பூஞ்சை தொற்று தான். இந்த பூஞ்சை அசால்ட்டாக விட்டால் பின்னாளில் நகங்கள் உடைந்து போதல், தடினமாக மாறுதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். மஞ்சள் நகங்கள் தைராய்டு பிரச்சினை, நுரையீரல் பாதிப்பு, டயாபெட்டீஸ் அல்லது சோரியாஸிஸ் போன்ற நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். ஒரு வேளை டயாபெட்டீஸ் நோயாக இருந்தால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை புரோட்டீன் கிளைகேஷன் என்ற வினைக்கு உட்படுகிறது. இது நமது நகங்களில் உள்ள கொலாஜெனை உடைத்து நகங்களை மஞ்சள் நிறமாக மாற்றி விடுகின்றன. எனவே தான் டயாபெட்டீஸ் இருப்பவர்களுக்கு நகங்கள் மஞ்சள் நிறமாக மாறக் கூடும்.
நீல நிற நகங்கள்
நகங்கள் நீல நிறத்தில் காணப்பட்டால் அது செத்து போச்சு என்று அர்த்தம். அதற்கு போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் நீல நிறத்தில் மாறி விடும். இது நமக்கு இருக்கும் நுரையீரல் பிரச்சனை, எம்பிஸிமா போன்ற பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம்.
குழியுடன் தென்படும் நகங்கள்
நகங்கள் குழிக்குள் புதைந்தது போல தென்பட்டால் சோரியாஸிஸ் அல்லது ஆர்த்ரிட்ஸ் (கீழ்வாதம்) போன்ற பிரச்சினைகளை காட்டுகிறது. அதே மாதிரி நகத்தின் நிறமும் சிவப்பு கலந்த பிரவுன் கலரில் மாறும். குழி விழுந்த நகத்தை மறைக்க நெயில் பில்லிங், ஸ்க்ராப்பிங் போன்ற நெயில் அழகு முறைகளை செய்து கொள்ளலாம்.
பிளவுபட்ட நகங்கள்
உங்கள் நகங்கள் அடிக்கடி உடைந்து போனாலோ அல்லது பிளவு பட்டாலோ தைராய்டு நோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் உடம்பில் போதிய ஊட்டச்சத்துயின்மை, நகங்கள் உலர்ந்து போனதின் அறிகுறியாகக் கூட இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே தைராய்டு பரிசோதனை மேற்கொள்வது நல்லது. அதுவே உடைந்து போய் மஞ்சள் நிறத்துடன் தென்பட்டால் பூஞ்சை தொற்றின் அறிகுறியாகும்.
வீங்கிய நகங்கள் (நகச்சுத்தி)
நகங்களை சுற்றியுள்ள தோல் சிவந்து வீங்கி் போய் காணப்படும். இந்த அழற்சி லூபஸ் அல்லது இணைப்புத் திசு கோளாறாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நகத்தில் கருப்பு கோடுகள்
கருப்பு கோடுகள் போன்ற நகங்களினுள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. ஏனெனில் இது மெலனோமா என்ற சரும புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது ஒரு அபாயகரமான புற்றுநோய்களுள் ஒன்று.
நகம் கடிப்பது
சில பேர் எப்போ பார்த்தாலும் நகத்தை கடிப்பார்கள். இப்படி கடிப்பது கூட அனிஸிட்டி (பய உணர்வு, பதட்டம் ) இவற்றின் பாதிப்பு களாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் நகங்களை அடிக்கடி கடிப்பது எண்ண சுழற்சி நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். நகங்களை கடிப்பதால் கீழ்க்கண்ட பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது நகங்களை சுற்றியுள்ள தோலில் இருந்து இரத்த போக்கு மற்றும் சாத்தியமான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது வாயைக் கொண்டு கடிப்பதால் உடல் முழுவதும் பாக்டீரியா, வைரல் தொற்று வர வாய்ப்புள்ளது பற்கள் எனாமல் சேதமடைதல் ஏற்படும் பற்களின் அமைப்பில் விரிசல் ஏற்படுதல் போன்றவை உண்டாகலாம். எனவே அடிக்கடி நகம் அடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
செங்குத்தான கோடுகள்
நகங்களில் வரை வரையாக செங்குத்தான கோடுகள் தென்பட்டால் உடல் எடை இழப்பு, வயதாகுதல், கால்களில் வீக்கம், அதிகப்படியாக சிறுநீர் கழித்தல், அனிமியா போன்ற இரும்புச் சத்து குறைபாடு இவற்றின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
கிடைமட்ட கோடுகள்
நகங்களில் கிடைமட்ட கோடுகள் அதிகமாக தென்பட்டால் அது தீவிர நோய்த் தொற்றின் அறிகுறியை குறிக்கிறது. உடம்பு சூடு அதிகமாக இருக்கும் நிமோனியா போன்ற தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
ஸ்பூன் நகங்கள் (வளைந்த நகங்கள்)
இந்த நிலையில் நகங்களின் நுனிகள் ஸ்பூன் மாதிரி வளைந்து காணப்படும். ஹீமோக்ரோமாடோசிஸின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது நம் உடலில் அதிகமான இரும்புச் சத்து அல்லது இரும்புச் சத்து பற்றாக்குறை இருக்கும் போது ஏற்படும் பாதிப்பு தான் இது.
வெள்ளை புள்ளிகள்
நகங்களில் சில நேரங்களில் வெள்ளை புள்ளிகள் ஆங்காங்கே தென்படும். இது கொஞ்ச நாட்களில் தானாகவே மறைந்து விடும். சில நேரங்களில் அது பூஞ்சை தொற்றாகக் கூட இருக்க வாய்ப்புள்ளது.
சுண்டு விரல் நகங்களில் பிறை வடிவம்
நம்முடைய சுண்டி விரல் சிறுநீரகம், இதயம் மற்றும் சிறுகுடலுடன் தொடர்புடையது. எனவே உங்க சுண்டு விரல் நகங்களில் பிறை போன்ற வடிவம் தென்பட்டால் அது உயர் இரத்த அழுத்தத்தை குறிப்பதாகும்.
உங்கள் நகங்களை ஈரப்பதமாக வைத்துக்கொள்வது எந்த நோய்களையோ அல்லது நகங்கள் சம்பந்தமான பிரச்சனையையோ வராமல் தடுக்கும். ஆனால் சந்தையில் இருந்து ரசாயன மாய்ஸ்சரைசர்களை வாங்குவதற்கு பதிலாக நீங்கள் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசரை முயற்சி செய்யலாம். டெட் ஸ்கின் மற்றும் தொற்றுக்களை அகற்றுவதற்காக தினசரி உங்கள் நகங்களை தேங்காய் எண்ணெய் மசாஜ் கொண்டு செய்யவும். தேங்காய் எண்ணெயின் நன்மைகள் நகங்களை குணப்படுத்துவது பற்றி நினைவில் கொள்ள மிக முக்கியமான விஷயம், நீங்கள் எல்லா நேரங்களிலும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். தேங்காய் எண்ணெய் விட உங்கள் கூழ் மற்றும் நகங்களை ஈரப்படுத்த சிறந்தது வேறு ஒன்றும் இல்லை. நடுத்தர சங்கிலிகளில் (மீடியம் சேய்ன்ஸ்) உள்ள கொழுப்பு அமிலங்களுடன் சேர்ந்து இயற்கையாக நிகழும் மாய்ஸ்சரைசராகும். தேங்காய் எண்ணெயை உங்கள் நகங்களில் சிறிய அளவில் பயன்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். நரம்பு தளங்களில் இறந்த சரும உயிரணுக்களின் குவியலை ஈரமாக்குவதற்குத் மறக்காதீர்கள். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து முறை இந்த தீர்வை முயற்சிக்கவும். தேங்காய் எண்ணையைப் பயன்படுத்தி நகங்களை குணப்படுத்த மற்றொரு செயல்முறை, 4-5 ட்ரோப் ஓரிகானோ ஆயில் கலந்து அதை உங்கள் நகத்தில் மசாஜ் செய்யவும். 10 நிமிடம் கழித்து எண்ணெய் காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உடனடியாக உங்கள் நகங்களை உலர வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். கிளிசரின் பயன்படுத்தும் முறை நகங்களை சுற்றி உள்ள பகுதியை ஹைட்ரேட் செய்ய மற்றும் நகம் பிட்டிங்கை குணப்படுத்த நீங்கள் கிளிசரின் பயன்படுத்தலாம். இது ஒரு சக்திவாய்ந்த ஈரப்படுத்தியாக கருதப்படுகிறது. திசுக்களில் உள்ளே ஈரப்பதத்தை பூட்டிவைக்கக்கூடிய சக்தி கிளிசரினுக்கு உள்ளது. ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் கிளிசரினை சம பாகங்கலாக கலக்கவும். அதை சுற்றியுள்ள தோல் மற்றும் பாதிக்கப்பட்ட நகங்கள் மீது தாராளமாக அப்ளை பண்ணவும். இதை குறைந்தபட்சம் அரை மணி நேரம் வைத்திருங்கள். அதை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்த வேண்டும். இதை ஒரு வாரத்திற்கு மூன்று முறை செய்தால் சிறந்த முடிவுகள் கிடைக்கும். மற்றொரு இயற்கையான ஈரப்பதமூட்டும் ஏஜென்ட் கிளிசரின். ஒரு நாளைக்கு 3-4 முறை பயன்படுத்துவது பிணைக்கப்பட்ட நகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தண்ணீரில் சில கிளிசரைன் கலந்து, அதை உங்கள் நகங்களின் மேற்பரப்பில் பயன்படுத்துங்கள். சிறிது நேரம் அதை அப்படியே விட்டுவிட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் அதை கழுவவும். அலோவேரா உங்கள் நகங்களின் மேற்பரப்பில் விரிசல் ஏற்பட்டிருந்தால் அதை நிரப்ப அலோ வேரா மிகவும் பயன்படுகிறது. அலோ வேரா இலையில் இருந்து ரா அலோ வேரா ஜெல்லை எடுத்து அதை உங்கள் நகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பிறகு நமது சிக்கினால் அந்த ஜெல் உறிஞ்சு போனதும் நன்கு கழுவவும். ஆப்பிள் சிடர் வினிகர் பூஞ்சை போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்தும் தோலின் pH அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால் பிணைக்கப்பட்ட நகங்கள் ஏற்படுகிறது. pH சமநிலையை பராமரிக்க மற்றும் அது தீவிரமடையாமல் இருக்க மற்றும் நோய்த்தொற்றுகளை நிறுத்துவதற்கு ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் சைடர் வினிகரை, எல்லா வகையான தோல் பிரச்சினைகளுக்கும் ஒரு இயற்கை தீர்வாக பயன்படுத்தலாம். சிறிது ஆப்பிள் சிடர் வினீகருடன் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து உங்கள் நகங்களை அதில் 15 நிமிடம் ஊறவையுங்கள். பிறகு மறக்காமல் நகத்தை உலர விடவும். நீங்கள் மாற்றங்களை பார்க்கும் வரை அதை தினமும் முயற்சி செய்யுங்கள். ஷியா வெண்ணெய் வைட்டமின் A மற்றும் வைட்டமின் E ஆகியவை பிட்டெட்/பிணைக்கப்பட்ட நகங்களுக்கு தேவையான இரண்டு முக்கிய வைட்டமின்கள். ஷீ வெண்ணெயில் சரியான அளவு வைட்டமின் A மற்றும் E உள்ளது. அது உலர்ந்த மற்றும் நறுக்கப்பட்ட நகங்களைத் சரிசெய்ய உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் நகங்களின் மேற்பரப்பில் சில ஷீ வெண்ணை தடவி, இரவில் அதை விட்டுவிட்டு அடுத்த நாள் காலை அதை கழுவ வேண்டும். இது நகங்களுக்கு ஒரு ஹைட்ரேடிங் ஏஜெண்டாக விளங்குகிறது. ஹைட்ரேட்டாக இருப்பது நகம் பிட்டிங்குக்கு மிக முக்கியம். சூரிய ஒளி வைட்டமின் D குறைபாடு இருந்தாலும் அது நகம் பிட்டிங்க்கு வழிவகுக்கும். சருமத்திற்கு சில வைட்டமின் D உள்ளடக்கங்களைப் பெறும் பொருட்டு, ஒவ்வொரு நாளும் காலையில் சூரிய ஒளிக்கு உங்கள் தோலை வெளிப்படுத்துவது மிக முக்கியம்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத்தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும்.
அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம். நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும்.
மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும். மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.
நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
குறிப்பு
சில நேரங்களில் நகங்களில் ஏற்படும் நிறங்கள் பாதிப்பில்லாத ஒன்றாகக் கூட இருக்கலாம். எனவே எல்லாவற்றையும் நினைத்து கவலைப்பட வேண்டாம். நகங்களில் ஏற்படும் நிறமாற்றம் உடலில் ஏற்படும் நோயின் முதல் அறிகுறியாகக் கூட இருக்கலாம். எனவே உங்களுக்கு சந்தேகம், விளக்கம் தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.