சேவாபாரதி மற்றும் சோஹோ ஃபவுன்டேஷன் இணைந்து தமிழகம் முழுவதும் இலவசமாக மருத்துவ உபகரணங்கள் விநியோகம் செய்யப் பட்டன.
தமிழகம் முழுவதும் covid-19 நோய்த்தொற்றின் தாக்கம் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் மிகைப்படுத்தும் கருவி இலவசமாக வழங்கும் சேவை நிகழ்வை சேவாபாரதி மற்றும் சோஹோ ஃபவுன்டேஷன் இணைந்து நடத்தியது.
ஒரு ஆக்சிஜன் மிகைப்படுத்தும் கருவியின் விலை சுமார் 4.65 லட்சம் ஆகும். இவ்வாறு, தமிழகம் முழுவதும் சுமார் 150 கருவிகள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை மதுரை கேசவ சேவா கேந்திரம் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தக் கருவிகளை சோஹோ ஃபவுன்டேஷன் உதவியுடன் நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்து தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு சேவாபாரதி இலவசமாக வழங்கி வருகிறது.
இதன் தொடக்க நிகழ்வாக மதுரையில் 10 மருத்துவமனைகளுக்கு முதல்கட்டமாக அந்த கருவியின் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் தேசிய செயலாளர் சுந்தரம், ஆர்.எஸ்.எஸ். மாநில மக்கள் தொடர்பு இணை அமைப்பாளர் ஸ்ரீநிவாசன், மதுரை கோட்ட அமைப்பாளர் முத்துக்குமார் மற்றும் கோட்ட இணை செயலாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.