
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முழு ஊரடங்கின் காரணமாக மக்கள் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றனர். அவர்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 கொடுப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா நிவாரணமாக கோதுமை 1 கிலோ, உப்பு 1 கிலோ, ரவை 1 கிலோ, சர்க்கரை 500 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், புளி 250 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், குளியல் சோப்பு 1, துணிதுவைக்கும் சோப்பு 1, மிளகு சீரகம் உட்பட கிட்டத்தட்ட 13 வகையான பொருட்கள் வழங்கப்படும் எனவும், ஜூன் 3ஆம் தேதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2.11 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த 13 பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


