![](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2021/07/ajith-valimai.jpg?w=696&ssl=1)
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அஜித் குமார் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
தற்போது இவரது நடிப்பில் ஹச்.வினோத் இயக்கி வெளிவர இருக்கும் வலிமை திரைப்படத்தின் Glimpse வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
இதனிடையே 2022ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்திற்கான OTT உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கி விட்டதாகவும், தொலைக்காட்சி உரிமையை ஜீ திரை மற்றும் ஜீ தமிழ் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.