
சமூகவலைதளங்களில் அதிக பேர் பயன்படுத்தும் பயன்பாடாக வாட்ஸ்அப் உருவெடுத்து இருக்கிறது. வாட்ஸ்அப் தளம் தங்களது வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் இந்தியாவில் மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு என புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதில் பிரதான ஒன்று 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களை கொண்ட தளம் பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 45 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தி பகிர்வு தளமாக இருக்கிறது. இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிறுவனம் பல அம்சங்களையும் தரங்களையும் கொண்டிருக்கிறது.
அரசும் தொடர்ந்து இதற்கான நிபந்தனைகளை உறுதி செய்து வருகிறது. அதில் ஒன்று மாதாந்திர இணக்க அறிக்கை ஆகும். இணைக்க அறிக்கையில் பல்வேறு வாட்ஸ்அப் கணக்குகள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புகார்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன.
வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 6 மாதங்களில் 1.32 கோடி இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்றால் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 20 லட்சம் இந்தியர்களின் கணக்ககுள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கிறது.
அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்தது என வெளிப்படைத்தன்மை அறிக்கை தெரிவிக்கிறது.
ஐடி விதிகள் 2021-ன் படி அக்டோபர் மாதத்திற்கான ஐந்தாவது மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் வெளியிட்டது. வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட பயனர் புகார்கள் மற்றும் அதற்குரிய நடவடிக்கை குறித்து வாட்ஸ்அப் அறிக்கையில் குறிப்பிட்டு வருகிறது.
பயனர் அறிக்கைகளின் அடிப்படையில் 18 வாட்ஸ்அப் கணக்குகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அக்டோபர் தடை செய்யப்பட்ட 2.069 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் வாட்ஸ்அப்பின் சொந்த கருவிகள் பயன்படுத்தி கண்காணிக்கப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ் சமீபத்திய வாட்ஸ்அப் இந்தியா மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் அக்டோபர் மாதத்தில் தடைசெய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை விவரத்து அறவித்தது.
இதில் பயனர்களிடம் இருந்து மொத்தம் 500 புகார்கள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவை தடை மேல்முறையீட்டு வகையை சேர்ந்தவை என்றும் வாட்ஸ்அப் தெரிவித்தது.
இதன்மூலம் நடவடிக்கை எடுப்பது என்பது பயனர் புகாரின் விளைவாக ஒரு கணக்கை தடை செய்வதையோ அல்லது முன்பு தடை செய்யப்பட்ட கணக்கை மீட்டெடுப்பதையோ குறிக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
பயனர்களை குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. பயனர்கள் புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் மின்னஞ்சல் ஐடியை அறிவித்துள்ளது.
அது [email protected] என்ற மின்னஞ்சல் ஐடி ஆகும். இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
அதேபோல் இந்திய குறைதீர்க்கும் அதிகாரிகளுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பலாம். துஷ்பிரயோகம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை நிறுத்துவதற்கு வாட்ஸஅப் அதன் சொந்த கருவிகளை கொண்டு கண்காணித்து வருகிறது.
அக்டோபர் மாதம் தடை செய்யப்பட்ட 2.069 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகளில் பெரும்பாலானவை இந்த முறைகேடு கண்டறிதல் செயல்முறையில் கீழ் கண்டறியப்பட்டது.
இதேபோல் செப்டம்பர் மாதம் இந்தியாவில் 2.209 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதில் பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட 309 தடை முறையீடுகளும் அடங்கும். இதில் 50 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வாட்ஸ்அப் தனது ஆதரவு பக்கத்தில் இந்த தகவல் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. புகார்கள் பெறும் தளத்தில் பயனர்களிடம் புகார்கள் பெறப்பட்டு தளத்தில் தவறான நடத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பயனர் பாதுகாப்பு அறிக்கையில், வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்களையும் அதற்கேற்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் விவரிக்கப்பட்டு வருகிறது.
அதிக தீங்கிழைக்கும் கணக்குகள், தேவையற்ற செய்திகளை அனுப்புவதைத் தடுக்கவும் வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்து வருகிறது.