
ஸ்கூட்டர் வாங்க ஒருவர் நாணயங்களை மூட்டை கட்டி எடுத்து வந்து சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் பர்பட்டா மாவட்டத்தில் உள்ள ஹவுலி என்ற கிராமத்தில் வசித்து வரும் இளைஞர், அப்பகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை இருந்துள்ளது.
இதனால் 7,8 மாதங்களாக தனது கடையில் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை நாணயங்களாக சிறுக சிறுக சேர்த்து வைத்துள்ளார்.
ஸ்கூட்டர் வாங்க தேவையான பணம் சேர்ந்ததும் அதை மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு ஸ்கூட்டர் ஷோரூமுக்கு சென்றார்.

அங்கு தனக்கு பிடித்த பைக்கை தேர்வு செய்து விட்டு பணம் கொடுக்கும்போது நாணயங்களை கட்டி வைத்திருந்த மூட்டையை காண்பித்துள்ளார்.
உடனே ஊழியர்கள் அந்த மூட்டையை தூக்கி வந்து திறந்து பார்த்துள்ளனர். அதில் நாணயங்கள் இருந்தைப் பார்த்த ஊழியர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
அப்போது தனது நீண்டநாள் ஆசை குறித்தும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஷோரூம் ஊழியர்களும் மூட்டையிலுள்ள நாணயங்களை உற்சாகமாக எண்ணினர். 2,3 நேரம் பிடிததது எண்ணுவதற்கு.

இதனை அடுத்து இளைஞரின் கடும் உழைப்பையும், பொறுமையையும், சேமிக்கும் திறனையும் ஊழியர்கள் வெகுவாக பாராட்டினர்.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.