சென்னை கோவையில் குறைந்த வாக்குபதிவு.. வெற்றி யாருக்கு?!

தமிழகத்தில் மிகப்பெரிய. சென்னை மாநகராட்சி மற்றும் கோவையில் வாக்குபதிவு குறைந்தது யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை எளிதில் கணிக்க முடியதாசூழல் அரசியல் வாதிகளிடையே நிலவுகிறது.

200 வார்டுகளை கொண்ட பெருநகரமான சென்னை மேயர் பதவி என்பது சாதாரணமானது அல்ல என்றாலும் சென்னையில் குறைந்த வாக்குப்பதிவுதான் இந்த தேர்தலில் எல்லோரையும் யோசிக்க வைத்துள்ளது.

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 59.01 சதவீதமும், கடந்த சட்டமன்ற தேர்தலில் 59.06 சதவீதமும் வாக்குகள் பதிவானது. அதற்கு முந்தைய தேர்தல்களிலும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவானது.
ஆனால் முதல் முறையாக 50 சதவீதத்துக்கும் கீழ் வாக்குப்பதிவு இந்த தேர்தலில் சரிந்து இருப்பது இதுவே முதல் முறை. மொத்தம் 43.65 சதவீதம் வாக்குகளே பதிவாகி உள்ளன.

வாக்குப்பதிவு குறைந்ததற்கு வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றது முக்கிய நிகழ்வாக கூறுகின்றனர்.
மேலும் படித்தவர்கள், வசதிபடைத்தவர்கள்தான் பெருமளவில் வாக்களிக்க வரவில்லை என்பது முக்கியகாரணமாகும்.படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் அதிகமாக உள்ள அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகி உள்ளன.

வழக்கமாக தேர்தலில் திரை நட்சத்திரங்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் பிரபல நடிகர் கள் பலர் வாக்களிக்கவில்லை.

இவ்வாறு ஆர்வமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்து இருப்பது யாருக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட அளவில் 59.61 சதவீதம் வாக்குகள் பதிவானது. 40.39 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. கோவை மாநகராட்சியில் 53.61 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமாக வாக்களித்து இருந்தனர்.

வாக்குகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது தேர்தல் கமி‌ஷன் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாக்கு சதவீதம் குறைய நோட்டா பட்டன் இல்லாமல் இருந்தது முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சில வாக்காளர்கள் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என நினைத்து வேலைகள் முடிந்த பின்னர் வாக்களிக்க ஆர்வமுடன் சென்றனர். ஆனால் மாலை 5 மணிக்கு பின்னர் யாரும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்ற வாக்காளர்கள் வாக்களிக்க வராததால் வாக்கு சதவீம் குறைந்ததாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி என மொத்தம் 23 லட்சத்தும், 34 ஆயிரத்து 294 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 14 லட்சத்து 21 ஆயிரத்து 187 பேர் மட்டுமே வாக்களித்தனர். 9 லட்சத்து 13 ஆயித்து 107 பேர் வாக்களிக்க வில்லை. தமிழகத்தில் 60 .70சதம் வாக்கு பதிவான நிலையில் சென்னை கோவையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது நகர்ப்புற உள்ளாட்சி‌ தேர்தல் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை யாராலும் எளிதில் கணிக்க முடியவில்லை.நாளை இரவு முடிவுகள் தெரிந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories