December 6, 2025, 5:46 AM
24.9 C
Chennai

ஹெலினா ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ!

helina - 2025

டிஆர்டிஓ (DRDO) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.
அதாவது நமது நாட்டின் படைகளின் வலிமையை அதிகரிக்கும் வகையில் பல ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது டிஆர்டிஓ (DRDO).

அதன்படி சமீபத்தில் ஹெலினா ஏவுகணை லடாக்கில் பனிமலை பகுதிகளில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் பாலைவனத்தில் ஏற்கெனவே இது பரிசோதனை செய்யப்பட்டது.

குறிப்பாக இந்த ஹெலினா ஏவுகணை உலகின் மிகவும் மேம்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களில் ஒன்று. அதேபோல் மூன்றாம் தலைமுறை ஏவகணையான இது, இரவு பகல் என்று எந்த நேரத்திலும் சென்று தாக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் லடாக்கின் பனி படர்ந்த மலைப் பிரதேசங்களில் ஹெலினாவை ஏவி சோதனை நடத்தப்பட்டது, குறிப்பாக இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள் முன்னிலையில் விஞ்ஞானிகள் குழு இந்த சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட இந்த ஏவுகணை தொலைதூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாங்கியை துல்லியமாகத் தாக்கி அழித்து என்று தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த பரிசோதனை வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, இது இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது.

இந்த அதிநவீன ஏவுகணை ஆனது 500 மீட்டர் தூரத்திலிருந்து 7 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்
தரை மட்டத்தில் பறந்து சென்று பீரங்கி மற்றும் கவச வாகனங்களை முன்புறமாகவும் அழிக்கும் திறமை கொண்டது.

இன்ஃப்ரா ரெட் இமேஜை அடிப்படையாக
மேலும் இன்ஃப்ரா ரெட் இமேஜை அடிப்படையாக வைத்தே இந்த ஏவுகணை இலக்கை தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இலக்கு எது என்று தீர்மானித்துவிட்டு ஏவினால் மட்டுமே போதுமானது. இலக்கை தாக்கும் வரை இதற்கு வழிகாட்டத் தேவையில்லை, குறி தவறாமல் போய்த் தாக்கிவிடும்.

அதேபோல் இதற்கு முன்பு ரஷ்யத் தயாரிப்பான ஷ்ட்ராம் ஏவகணைகளையே பயன்படுத்தி வந்தோம். தற்போது அதைவிட அதிக தூரம் சென்று இலக்கை மிகவும் துல்லியமாகத் தாக்கும் தன்மை கொண்டது இந்த ஹெலினா. குறிப்பாக இந்திய ராணுவமும் விமானப்படையும் இனி இதைப் பயன்படுத்தப் போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

போன்ற அருமையான ஏவுகணைகளைத்
பிரம்மோஸ் போன்ற அருமையான ஏவுகணைகளைத் தயாரித்த இந்திய விஞ்ஞானிகள் குழு தான் இந்த ஹெலினாவையும் உருவாக்கியுள்ளது. மேலும் சுதேசியாக ஆயுதங்களை தயாரிப்பதன் மூலம் பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை மிச்சம் செய்ய முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories