ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு சூட மதுரைக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் களைந்த மலர்மாலை, கை க்கிளி, பட்டு வஸ்திரம் ஆகிய மங்கலப்பொருட்கள் முறையே இங்கிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் மலையப்ப சுவாமியை அணியவும் ஸ்ரீரங்கத்தில் பங்குனி மாத தேரோட்டத்தில் ஸ்ரீரங்கநாதர் அணியவும் சித்திரை மாதம் மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரையில் இறங்கும் கள்ளழகர் அணியவும் எடுத்துச்செல்லப்படும் .
இதற்கு பதில் மரியாதையாக 3 கோவில்களில் இருந்து ஆண்டாள் தேரோட்டத்தின்போதும் திருக்கல்யாணத்தின் போதும் வஸ்திர மரியாதை இங்கு அனுப்பப்படும் இந்த ஆண்டு மதுரை வைகை ஆற்றில் சித்ரா பௌர்ணமி அன்று தங்க குதிரையில் அமர்ந்து அருள்பாலிக்கும் கள்ளழகர் அணிவதற்காக ஆண்டாள் சூடிக் களைந்த பட்டு, கை கிளி ,மலர் மாலை ஆகியவை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து இன்று ஏப்14ஆம் தேதி ஸ்தானிகம் ஹயகிரிவாஸ் கொண்டு சென்றார் .
சிறப்பு பூஜை ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் தலைமையில் ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ், மணியம் கோபி, கிச்சப்பன் வேதபிரான் சுதர்சன் ஆகியோர் செய்தனர. இதனை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர் .
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் முத்து ராஜா மற்றும் கோவில் அலுவலர்கள் பணியாளர்கள் செய்திருந்தனர்






