
மிகப் பெரிய அலையாக இருந்தாலும் அதை ரசிக்க வைக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி பலரின் மனதையும் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோவில் கடலலை கருமையாக தெரிந்தாலும், அது பல வண்ண ஜாலங்களை காட்டுகிறது. 37 விநாடிகளே இருக்கும் இந்த வைரல் வீடியோவில் பலவித பரிணாமங்கள் தெரிகிறது. இதைப் பார்த்தால், அலையின் பிரம்மாண்டம் நம்மை மலைக்க வைக்கிறது.
வீடியோவைப் பார்த்தால், ஒரு முறையுடன் பார்ப்பதை நிறுத்திவிட முடியும் என்று தோன்றவில்லை. கடலின் அலை வானத்தை எட்டுகிறது.
விண்ணை முட்டும் அலைகள், வானிலிருக்கும் மேகத்தை இழுத்துவந்து கடலில் விடும் காட்சி அற்புதமாக இருக்கிறது.
அரை நிமிடத்தில் பல அற்புதங்களைக் காட்டும் இந்த வீடியோ, Buitengebiede என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு, பலரால் பார்க்கப்பட்டு இணையத்தில் சுற்றி சுற்றி வலம் வருகிறது.
இணையத்தில் வலமாக வலம் வந்தாலும், இந்த கடலலை எழும்புவது என்னவோ வானை நோக்கித்தான் என்றாலும் அது செங்குத்தாக இல்லை. வளைந்து நெளிந்து கடலலை உயர்வதைப் பார்த்தால், அது நாகப்பாம்பு படமெடுப்பதைப் போல தோன்றுகிறது.
நொடிக்கு நொடி மாறும் வண்ண ஜாலம், விண்ணில் இருக்கும் மேகக்கூட்டத்தை பிடிவாதமாக இழுத்து, முரட்டுத்தனமாக கடலுக்கு தள்ளும் பிடிவாதம் என பல்வேறு பரிணாமங்களில் ஜொலிக்கிறது இந்த கடலலை.
கருமை, வெண்மை, மஞ்சள், சிவப்பு, நீலம் என வண்ணமயமாக சட்டென்று மாறி உருமாறி கடலில் விழும் இது ஒற்றை அலையா?
அலைகள் என்றும் ஓய்வதில்லை என்றாலும், ஒரு அலை ஒருமுறைதான் வரும் என்பதும் உண்மைதானே? இந்த அலை ஒருமுறை மட்டுமே கடலில் எழுந்திருந்தாலும், லட்சக்கணக்கானவர்களால் தொடர்ந்து வீடியோவில் பார்க்கப்பட்டு அமர அலையாக மாறிவிட்டதோ?
இயற்கையின் மாயஜாலங்கள் என்றும் என்றென்றும் பிரமிப்பைத் தருபவை. அதற்கு அண்மை உதாரணமாக இந்த கடலலை வீடியோ நம்மை அலைபாய வைக்கிறது.
Perfect wave touching the clouds.. pic.twitter.com/93RsgS3YvC
— Buitengebieden (@buitengebieden) May 3, 2022





