


கேரளாவில் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று ஐப்பசி மாத பூஜை வழிபாடுகள் துவங்கியது.நடப்பு ஆண்டுக்கான புதிய மேல்சாந்தி தேர்வு சபரிமலையில் இன்று காலை நடைபெற்றது.
திருஉளசீட்டு குலுக்கலில் ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை மேல்சாந்தியாகவும் ஸ்ரீ ஹரிஹரன் நம்பூதிரி மாளிகைப்புறம் மேல்சாந்தியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இவர்கள் வரும் கார்த்திகை மாதம் முதல் 2023ஐப்பசி மாதம் முடிய ஒரு ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கி மேல்சாந்தி களாக பதவியில்இருந்து பூஜை வழிபாடு நடத்துவார்கள்.
கே ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை மேல்சாந்தி. இவர் கண்ணூர் தளிபரத்தை சேர்ந்தவர். கண்ணூர் சௌவா கோயிலில் மேல்சாந்தியாக பணியில் உள்ளார். விருச்சிகம் ஒன்றில் இவர் சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி யாக பணியை துவங்குவதால்.
ஹரிஹரன் நம்பூதி மாளிகப்புரம் மேல்சாந்தியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வைக்கம் பகுதியை சேர்ந்த வர் இவர்.
புதிய மேல்சாந்தி தேர்வு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, தேவசம் போர்டு தலைவர் கே.ஆனந்த கோபன், தேவசம் ஆணையர் பி.எஸ்.பிரகாஷ், பார்வையாளர் நீதிபதி பாஸ்கரன், சிறப்பு ஆணையர் எம்.மனோஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த கிருத்திகேஷ் வர்மா சபரிமலை மேல்சாந்தி மையும் பௌர்ணமி ஜி. மளிகை புறம் மேல்சாந்தியை தேர்ந்தெடுத்தார்.





