
கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, ‘நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்’ எனப் பேசி தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சமூக நீதி பேசும் திமுகவினர் ஹிந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதையோ, ஹிந்து மத நம்பிக்கையை பின்பற்றுவதையோ செய்வதே இல்லை. பகுத்தறிவு கழகத்திலிருந்து வந்த திராவிட முன்னேற்ற கழகத்தில் இந்து மதம் என்றால் வெறுப்பு, ஹிந்து கடவுளர்கள் என்றால் அதீத வெறுப்பு என்ற மனநிலை ஓங்கியிருக்கும். இஸ்லாமிய, கிறிஸ்தவ மதம் என்றால் வாக்கு வங்கிக்கு பயன்படுமே என்று அவ்வப்போது குல்லா போடுவதும், கிறிஸ்துமஸ் கேக் சாப்பிடுவதும் வழக்கம்.
சென்னை மண்ணடி, பிரகாசம் சாலையில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் 2,000 பேருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதி பங்கேற்று, தான் ஒரு கிறிஸ்தவன் என்றும், கிறிஸ்தவனாக இருப்பது பெருமை என்றும் பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது ; சிலருக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இதற்கு நான் பதில் தருகிறேன். இந்து அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இப்போது அங்கு அல்லேலூயா எனக் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும். அவர் எப்போதுமே மாலையும் கழுத்துமாகத்தான் இருப்பார். அதே நேரம் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார். இதற்குப் பெயர்தான் சமூக நீதி ஆட்சி. இவைத்தான் ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது.
இத்தகைய ஆட்சியைத்தான் இப்போது முதல்வர் ஸ்டாலினும் நடத்தி வருகிறார். இன்னுமே சொல்லப்போனால், நானும் ஒரு கிறிஸ்துவன்தான். கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். சேகர்பாபு அல்லேலுயானு சொல்கிறார்.. உதயநிதி கிறிஸ்தவனு சொல்கிறார் என்று சிலருக்கு நிச்சயம் வயிறு எரியவே செய்யும்..
நான் படித்தது எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளி, கல்லூரியும் லயோலா கல்லூரியில் தான் படித்தேன். அதேபோல நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவரைத்தான். எனவே அந்த உரிமையில் இங்கே வந்து பேசுகிறேன்” என கிறிஸ்துவராகவே மாறி உதயநிதி பேசியுள்ளார்.
கிறிஸ்தவர் என்பார்கள், இஸ்லாமியர் என்பார்கள் ஆனால் கட்சியில் உள்ள தொண்டர்களில் 95 % ஹிந்துக்கள் என்று சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள், ஹிந்து கோவில்களை இடிப்பார்கள், ஹிந்து கடவுள்களை பழிப்பார்கள். ஆலய வழிபாட்டு முறைகளை தடுப்பார்கள். மொத்தத்தில் இவர்கள் ஹிந்துக்களின் எதிரிகள் மட்டுமல்ல உண்மையான சமூக நீதிக்கும் எதிரானவர்கள் என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்கள் எதிரொலித்தது.