
நிலக்கோட்டையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வதந்தி; வீடு வீடாக அதிகாரிகள் விழிப்புணர்வு!
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம்,
நிலக்கோட்டை அருகே ,எத்திலோடு ஊராட்சி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனவே, பிளாஸ்டிக் அரிசி இதில் கலந்துள்ளதா என, சந்தேகமடைந்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது. ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசிஉள்ளதாக வதந்தி பரவியது. இதனைத்
தொடர்ந்து, நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரி ரேசன்கடைகளில் ஆய்வு செய்தார்.
அதில், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து, வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் அதிக சத்துள்ள செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பதாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
எஸ்.ஐ., பணியில் சேர்ந்து 12 ஆண்டுகளை கடந்தும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வின்றி 1,026 பேர் காத்திருக்கின்றனர்.
கடந்த 2011 ல் தமிழக அளவில் 1026 பேர் நேரடி எஸ்.ஐ.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், 10 ஆண்டு பணி முடித்ததும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கவேண்டும். ஆனால், 12 ஆண்டுகளை கடந்தும் பதவி உயர்வின்றி தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது: பணியில் சேர்ந்து 10 ஆண்டிற்கு மேலானதால் இன்ஸ்பெக்டருக்கு நிகரான சம்பளம் பெறுகிறோம். எங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதால், அரசுக்கு நிதி சுமை ஏற்பட வாய்ப்பில்லை. இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
நிதி நிறுவன முற்றுகை:
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி எஸ்.எம்.சி. நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள். பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு காலம் முடிந்த பின்பும் பணம் தர மறுப்பதால், முற்றுகை போராட்டம் நடை பெற்றது.
ஜந்து மணிநேரமாக தொடரும் போராட்டம் ஆகும்.
நரிக்குடி ஒன்றியம், டி. கடம்பன்குளம் ஊராட்சியில் பனை விதை நடும் பணி
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே கடம்பன்குளம் ஊராட்சியில், பனைவிதை சேகரிப்பு மற்றும் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் கடம்பன்குளம் ஊராட்சியில், பனை விதை சேகரிப்பு மற்றும் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது. நூறுநாள் வேலை திட்ட பயனாளிகள் மூலம் கிழவி குளம், கடம்பன்குளம், சீனிக் காரனேந்தல் பிரண்டைக்கும் ஆகிய கிராமங்களில் பனைவிதை நட்பபட்டு வருகிறது. ஊராட்சியில், உள்ள அனைத்து பகுதியிலும் நட்ப்பு ஆண்டில் ஒரு லட்சம் பணை விதைகள் சேகரிக்கப்பட்டு நட்டுவைக்கப் படும் என்று ஊராட்சி மன்றத் தலைவர் ராக்கு கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். .
காரியாபட்டி பேரூராட்சி பேரூந்து நிலைய விரிவாக்கப்பணி: பேரூராட்சி சேர்மன் – அதிகாரிகள் ஆய்வு
காரியாபட்டி பேரூந்து நிலைய விரிவாக்கப்
பணிகளை ,சேர்மன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூந்து நிலையம் இடநெருக்கடி காரணமாக பேருந்துகள் உள்ளே சென்று வர மிகவும் சிரமமாக இருந்தது. . பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பேரூந்து நிலையத்தை விஸ்தரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது, அருப்புக்கோட்டை, திருச்சுழி, டி.கல்லுப்பட்டி, கமுதி, கள்ளிக்குடிஆகிய பகு திகளுக்கு செல்லும் பஸ்கள் காரியாபட்டி முக்கு ரோட்டிலும் , நரிக்குடி, மதுரை, திரு மங்கலம், திருப்புவனம், முக் குளம் பகுதிக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளி பகுதியில் இருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் பஸ் நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்கபேரூராட்சி ,தலைவர் ஆர்.கே. செந்தில் , பேரூராட்சிக ளின் மதுரை மண்டல செயற் பொறியாளர் சாய்ராம், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், இள நிலை பொறியாளர் கணேசன் ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது,
பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டியராஜன், ஒப்பந்தகாரர் விஜயகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.