spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தென்மாவட்டங்களில் கனமழை! நெல்லையில் வெள்ளம்; விரையும் பேரிடர் மீட்புப் படை!

தென்மாவட்டங்களில் கனமழை! நெல்லையில் வெள்ளம்; விரையும் பேரிடர் மீட்புப் படை!

- Advertisement -

பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக தென் தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு குழு. அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டுச் சென்றன.

தென்காசி : மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தென்காசி குற்றால அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

குற்றாலத்தில் குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் இடைவிடாத கனமழை காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் தற்போது குளிக்க தடை விதிக்கப்பட்டது!

தாமிரபரணியில் வெள்ளம் – ஆட்சியர்கள் எச்சரிக்கை

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கான உதவி எண்கள் அறிவிக்கப் பட்டிருக்கிறது.

அவசர உதவி எண்கள் அறிவிப்பு

மாவட்ட பேரிடர் கட்டுப்பாடு மையம் – 1077
மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் – 1070
மின்னகம் உதவி மையம் – 94987 94987

தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

குமரியில் படகு போக்குவரத்து நிறுத்தம்

கன்னியாகுமரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சுற்றுலாத்தலமான விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் சுற்றுலாப்பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அணைகளில் தளும்பும் தண்ணீர்

பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நெல்லை ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

குமரி, நெல்லையில் மழை அதிகம்!

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில், கன்னியாகுமரியில் இயல்பை காட்டிலும் 81 சதவீதமும், நெல்லையில், 61 சதவீதமும் கூடுதல் மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சேவியர் காலனியில் நீரோடையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை மாநகராட்சி அகற்ற நடவடிக்கை எடுக்காததால் தற்போது வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் விநாயகர் கோயில் பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. தாமிரபரணியில் அதிகமாக வெள்ளம் வருவதால் தாமிரபரணி, நம்பியார், கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்ட கால்வாயில் இன்று மாலை 4 மணிக்கு அம்பை சாலை வெள்ளாங்குழியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க வெள்ளோட்டம் பார்க்கும் வகையில் மழை வெள்ள உபரி நீரினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு. அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்து வைக்க உள்ளார் என்று நிர்வாகம் சார்பில் தகவல் வெளியிடப் பட்டது.

பெய்த மழை அளவுகள்

தமிழ்நாடு, புதுச்சேரியில் 16-12-2023 காலை 0830 மணி முதல் 17-12-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

நாலுமுக்கு (திருநெல்வேலி) 19;
ஊத்து (திருநெல்வேலி) 17;
காக்காச்சி (திருநெல்வேலி) 15;
மாஞ்சோலை (திருநெல்வேலி) 13;
கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 11;
திருக்குவளை (நாகப்பட்டினம்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) தலா 9;
தீர்த்தாண்டானம் (இராமநாதபுரம்), முத்துப்பேட்டை (திருவாரூர்) தலா 8;
திருவாரூர், நீடாமங்கலம் (திருவாரூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), வட்டனம், தொண்டி, ராமநாடு KVK AWS (இராமநாதபுரம்), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி) தலா 7;
செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை, மயிலாடுதுறை (மயிலாடுதுறை), நன்னிலம், திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), வேளாங்கண்ணி, தலைஞாயர் (நாகப்பட்டினம்), (திருவாரூர்), பட்டுக்கோட்டை, கொடவாசல் (தஞ்சாவூர்), மிமிசல் (புதுக்கோட்டை), இராமநாதபுரம் (இராமநாதபுரம்) தலா 6;
மன்னர்குடி, பாண்டவையார் தலைப்பு (திருவாரூர்), கோடியாக்கரை, நாகப்பட்டினம், வேதரண்யம் (நாகப்பட்டினம்), திருவிடைமருதூர், மதுக்கூர், மஞ்சலாரு, அதிராமபட்டினம், அணைக்கரை, அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்), நகுடி (புதுக்கோட்டை), இராதாபுரம், அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), திருவாடானை (இராமநாதபுரம்), ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), முள்ளங்கினாவிளை, குருந்தன்கோடு (கன்னியாகுமரி) தலா 5;
காட்டுமன்னார்கோயில் (கடலூர்), சீர்காழி, மணல்மேடு (மயிலாடுதுறை), வலங்கைமான் (திருவாரூர்), காரைக்கால் (காரைக்கால்), நெய்வாசல் தென்பாதி, பேராவூரணி (தஞ்சாவூர்), அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கடலாடி, மண்டபம், வாலிநோக்கம் (இராமநாதபுரம்), திருச்செந்தூர் AWS, சாத்தாங்குளம் ARG (தூத்துக்குடி), மயிலாடி, கொட்டாரம், கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 4;
தாரங்கம்பாடி (மாயிலதுத்தூரை), திருப்பூண்டி (நாகபட்டினம்), கும்பகோணம், அய்யாம்பேட்டை, தஞ்சாவூர், தஞ்சை பாபநாசம், வெட்டிகாடு, தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), குருவடி (அரியலூர்), ஆலங்குடி, மலையூர், ஆயின்குடி, வம்பன் KVK AWS (சிவகங்கை), கன்னடியான் அணைக்கட்டு, களக்காடு, பாபநாசம், மணிமுத்தாறு (திருநெல்வேலி), இராமேஸ்வரம் (இராமநாதபுரம்), குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர், காயல்பட்டினம் (தூத்துக்குடி), பூதப்பாண்டி, மாம்பழத்துறையாறு, ஆனைகிடங்கு, சூரலக்கோடு, நாகர்கோவில், இரணியல், தக்கலை, குழித்துறை (கன்னியாகுமரி) தலா 3;
லால்பேட்டை (கடலூர்), அரியலூர் தாலுகா அலுவலகம், அரியலூர் PTO, ஜெயம்கொண்டம், செந்துறை, சுத்தமல்லி அணை (அரியலூர்), புள்ளம்பாடி, கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), பெருங்களூர், அரிமளம், கிளானிலை, காரையூர், புதுக்கோட்டை (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை), சேரன்மாதேவி, சேர்வவால் அணை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, திருநெல்வேலி (திருநெல்வேலி), முதுகுளத்தூர், தங்கச்சிமடம், பாம்பன், இராஜசிங்கமங்கலம், பரமக்குடி (இராமநாதபுரம்), விளாத்திகுளம், கடம்பூர், வைப்பார் (தூத்துக்குடி), பெருஞ்சாணி அணை, திற்பரப்பு, புத்தன் அணை, முக்கடல் அணை, பேச்சிப்பாறை, கன்னிமார், சித்தார் 1 (கன்னியாகுமரி), குன்னூர் PTO, கிண்ணக்கொரை, குன்னூர் (நீலகிரி) தலா 2;
வடகுத்து, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, அண்ணாமலை நகர் (கடலூர்), பூதலூர், ஈச்சன்விடுதி, வல்லம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கல்லணை (தஞ்சாவூர்), திருமானூர் (அரியலூர்), புது வேட்டக்குடி, வேப்பந்தட்டை, பெரம்பலூர் (பெரம்பலூர்), ண்ஹந்தியார் தலைப்பு, துவாக்குடி IMTI,, விமான நிலையம், சமயபுரம், தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), தானியமங்கலம் (மதுரை), சாத்தூர் (விருதுநகர்), கறம்பக்குடி, திருமயம், குடிமியான்மலை, பொன்னமராவதி (புதுக்கோட்டை), திருப்பத்தூர், சிவகங்கை பொதுப்பணித்துறை ட்ராவலர்ஸ் பங்களா சிவகங்கை, சிங்கம்புணரி (சிவகங்கை), கடனா அணை (தென்காசி), மூலைக்கரைப்பட்டி, நம்பியார் அணை (திருநெல்வேலி), கமுதி, கமுதி ARG, பள்ளமொர்குளம் (இராமநாதபுரம்), கயத்தாறு, சூரங்குடி, பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), ஆரல்வாய்மொழி, பாலமோர், களியல், அடையாமடை, குளச்சல் (கன்னியாகுமரி), சாம்ரஜ் எஸ்டேட், அழகரை எஸ்டேட், குந்தா பாலம், அடார் எஸ்டேட், எமரால்ட் (நீலகிரி) தலா 1.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe