December 6, 2025, 2:38 PM
29 C
Chennai

ஈரோடு-செங்கோட்டை ரயிலுக்கு பயணிகள் பலத்த வரவேற்பு; நேரத்தை மாற்றியமைக்க கோரிக்கை!

erode sengottai train - 2025
#image_title

ஈரோடு- நெல்லை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் கடந்த ஜன.24 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் Dr.L.முருகன் இரயில் சேவையை துவக்கி வைத்தார். உடன் சேலம் கோட்ட ரயில்வே உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஈரோடு to செங்கோட்டை இரயிலின் நேரத்தை மாற்றினால் நல்லது என்ற குரல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. இது குறித்து செங்கோட்டை பயணிகள் சங்கத்தினர் குறிப்பிட்டபோது, ஈரோட்டில் பகல் 14:00pmக்கு எடுத்து செங்கோட்டைக்கு இரவு 23:10pm போய் சேர்வதாக இருக்கிறது அட்டவணை. செங்கோட்டையில் இரயில் நிலையம் ஏறத்தாழ ஊருக்கு வெளியே இருக்கிறது. ஏறத்தாழ பின்னிரவு ஆரம்பமான நேரத்தில் தான் செங்கோட்டைக்கு இந்த இரயில் வந்தடையும். அங்கிருந்து சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்ல பொதுப் போக்குவரத்து அதாவது பேருந்துப் போக்குவரத்து அவ்வளவாக இருக்காது. தனியார் பேருந்துகளும் உண்டு. ஆனால் இரவு 23:00 pm க்கு மேல் இயக்குவார்களா என்பது உறுதியாகத் தெரியாது.” என்றனர்.

2024 புத்தாண்டு – குடியரசு தின பரிசாக கிடைத்த ஈரோடு – செங்கோட்டை ரயிலை விருதுநகர் நெல்லை தென்காசி மற்றும் ஈரோடு மதுரை திண்டுக்கல் மாவட்ட ரயில் பயணிகள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த ரயிலின் பயண நேரத்தைக் குறைத்து செங்கோட்டையில் காலை 6மணிக்கு புறப்பட்டு இரவு 10மணிக்கு வரும்படி மாற்றியமைக்க ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

புதிதாக நீட்டித்து இயக்கப்படும் வண்டி எண் 16845 ஈரோடு – செங்கோட்டை 442 கிமீ தூரத்தை சராசரி வேகம் 49 கிமீ, பயண நேரம் 9 மணி நேரம் எடுத்து கொள்கிறது.
வண்டி எண் 16846 செங்கோட்டை – ஈரோடு 442 கிமீ தூரத்தை , சராசரி வேகம் 44.2 கிமீ, பயண நேரம் 10 மணி நேரம் எடுத்து கொள்கிறது. இதனால் இரு மார்க்கத்தில் 8 மணி நேர பயணத்தில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

2024 புத்தாண்டில் இயங்கும் ஈரோடு – செங்கோட்டை ரயிலின் சிறப்புகளாக பல உள்ளன. 1904 ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் ரயில்கள் இயங்கி 21.09.2012 அன்று அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரயில்கள் இயங்கி வந்த திருநெல்வேலி – தென்காசி ரயில் வழித்தடத்தில் நிரந்தரமாக முதன் முதலாக கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடுக்கு இயக்கப்படும் ரயில் ஆகும்.

12 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஈரோடு – செங்கோட்டை இடையே முழுவதும் மின்சார இன்ஜினில் இயங்கும்.இந்த ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினசரி ரயிலான காலையில் நெல்லை சென்று திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் ரயில்களை பிடிக்க முடியும்.இருக்கன்குடி மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திண்டுக்கல்லில் இறங்கி பழனி செல்வதற்கு இணைப்பு என சிறப்பம்சங்கள் கொண்டது.

காலையில் மும்பை உள்ளிட்ட தொலைதூர ரயில்களை பிடிப்பதற்கு இந்த ரயில் வசதியாக இருக்கும். இரவு நேர பணிகளை நெல்லையில் முடித்து விட்டு கல்லிடை அம்பை கடையம் பாவூர்சத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும்.

16845 ஈரோடு- நெல்லை ரயில் ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு வந்து 8.55 மணிக்கு வந்து செங்கோட்டைக்கு இரவு 11:10 க்கு சென்று அடையும். 16846 செங்கோட்டையிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லையில் 6.30 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டை மாலை 3 மணிக்கு சென்றடையும்.

ஈரோட்டில் இருந்து கொடுமுடி புகழூர் கரூர் வெள்ளியானை எரியோடு திண்டுக்கல் அம்பாத்துரை கொடைரோடு சோழவந்தான் மதுரை திருப்பரங்குன்றம் திருமங்கலம் கள்ளிக்குடி விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி கடம்பூர் நெல்லை சேரன்மகாதேவி, கல்லிடை அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி நிறுத்தங்களில் நின்று செல்லும்.இந்த ரயிலின் பயண நேரத்தைக் குறைத்து செங்கோட்டையில் காலை 6மணிக்கு புறப்பட்டு இரவு 10மணிக்கு வரும்படி மாற்றியமைக்க ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories