மதுரை: மதுரை மாட்டுத்தவணி பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்துகள் இயக்கம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (15.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை மண்டலம்) சார்பாக,
39 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், பத்தாண்டுகள் விபத்தின்று பேருந்து இயக்கிய 10 ஓட்டுனர்களுக்கு 100 கிராம் வெள்ளி நாணயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் , தமிழ்நாடு அரசு போக்குவரத்
துக் கழக மேலாண் இயக்குனர் (மதுரை மண்டலம்) ஆ.ஆறுமுகம் , மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.