தமிழகத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு ரஜினிகாந்த் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று ஒரு கூட்டம் சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரியார் சிலை பிரச்சனை குறித்தும் ரஜினி எதுவும் பேசவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ‘பெரியார் சிலையை அகற்றவேண்டும் என பேசியதும், சிலையை உடைத்ததும் காட்டுமிராண்டித்தனமான செயல். இதனை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்’ என்று கூறினார்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் வெறுமனே குரல் கொடுத்தால் போதாது, அந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதை பார்க்க வேண்டும் என்றும் காவிரி, முல்லை பெரியார், நீட், ஜிஎஸ்டி, இலங்கை பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தும் அவை தீர்க்கப்படாததற்கு காரணம், வெறுமனே குரல் கொடுத்துவிட்டு பின்னர் அந்த பிரச்சனையை மறந்துவிடுவதுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.



