செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவில் திருவாசகம் முற்றோதுதல்.
செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு நித்யகல்யாணி அம்மன் திருக்கோவிலில் கீழத்தெரு சேனைத்தலைவா் சமுதாயம் சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்
இந்தாண்டு நவராத்திரி திருவிழா செப்-03ஆம் தேதியில் துவங்கப்பட்டு நாள்தோறும் நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் விழாவில் 10நாட்களும் ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 2ஆம் நாளான நேற்று கோவில் வளாகத்தில் வைத்து உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கீழத்தெரு சேனைத்தலைவா் சமுதாய தலைவர் செல்லப்பாஇசக்கி தலைமைதாங்கினார்.
பொருளாளா் சுந்தரம், மண்டகபடிதாரா் எம்எஸ்.முத்துசாமி, தங்கையா
ஆடிட்டர்சங்கர், ஆகியோர் முன்னிலைவகித்தனா். செயலாளா் ராம்நாத் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து திருவாசகி சிவபகவதி தலைமையில் திருவாசக குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. பின்னா் மாபெரும் அன்னதான விருந்து நடந்தது.
நிகழ்ச்சியில் மண்டகபடிதாரர்கள் சண்முகசுந்தரம், வள்ளி, சிவக்குமார்,
கல்யாணி. கார்த்திக்கேயன், இசக்கிமுத்து, சிவசங்கரி, சேகர், குருசாமி,
மாரியப்பன், தர்மராஜ், கணேசன், நாகராஜ், சரவணன், மணி, இராமலிங்கம், ஆறுமுகம், ஐயப்பன், வள்ளி, இசக்கி திருவாசக குழுவினா்கள் நெடுஞ்செழியன், பழனியம்மாள், செல்வராணி, ஸ்ரீதர், தேவி மற்றும் சமுதாய பெரியோர்கள், இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பூஜை ஏற்பாடுகளை கோவில் பரம்பரை பூஜாரிகள் கண்ணன், ஐயப்பன் செய்திருந்தனா். விழாவில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனா்.