அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வரும் டிடிவி தினகரன் சமீபத்தில் ஆர்.கே.நகர் தேர்தைலி குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனால் இனிவரும் தேர்தல்களில் தனக்கு குக்கர் சின்னமே ஒதுக்க வேண்டும் என்று அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட டெல்லி ஐகோர்ட் கடந்த சில நாட்களாக விசாரணை செய்தது. தினகரனின் இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் அளிக்கப்பட்ட நிலையில் டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு தினகரன் அணிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending