திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமிக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டம் அலுவலக கண்ணாடி உடைக்கப்பட்டது. அரசு உழியர்களை கலெக்டர் மரியாதை குறைவாக நடதுவதாகவும் கலெக்டர் கீழ் உள்ள அதிகாரிகள் மரியாதை குறைவாக நடத்தும்போது கண்டுக்கொள்வதில்லை என்று கலெக்டர் மீது புகார் கூறினர். இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை போரட்டத்தை சங்கம் அறிவித்தது. பிற்பகலில் கலெக்டர் வெளியே வந்தபோது அவரது கார் முற்றுகையிட்டப்பட்டது. அதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துசெல்லப்பட்டார். கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர். பிறகு போலீஸ் ஆர்ப்பட்டகாரர்களை கைது செய்தனர்.
Popular Categories



