போராடி வரும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

சற்றுமுன் சென்னை தமிழகம்

teachers - 2026சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிககள் 10 பேர் தலைமைச் செயலகம் புறப்பட்டுள்ளனர். ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி சென்னையில் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களை விட அதற்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான சம்பளமே கிடைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.